(எம்.வை.எம்.சியாம்)
போதைப்பொருள் கடத்தலுக்காக புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியின் மனைவியுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் பயணித்த வேனில் இருந்த பெண்ணை விசாரித்தப் போது 'சுது அக்கா' என அடையாளம் கண்டுள்ளதுடன் குருநாகல் மற்றும் அம்பன்பொல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்வதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை செய்ய சார்ஜன்ட் வந்த கறுப்பு வேனை இந்த பெண் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவரின் கணவர் ஒரு வருடத்திற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் இந்த சார்ஜன்ட் குறித்த சுற்றிவளைப்பில் இருந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் கணவனை விடுவிப்பதற்காக வேன் ஒன்றையும் குறித்த சார்ஜனுக்கு கைதியின் மனைவியான பெண் பரிசளித்துள்ளார்.
சந்தேகநபர நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் இம்மாதம் 18ஆம் திகதி வரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கவுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM