‘சலார்’ படத்தில் வரதராஜ மன்னராக மிரட்டும் நடிகர் பிருத்விராஜ்

By Digital Desk 5

17 Oct, 2022 | 12:24 PM
image

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிருத்விராஜ், 'சலார்' படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.  

‘கே ஜி எஃப்’ எனும் மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சலார்’ இதில் பான்இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். 

இவர்களுடன் ஜகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற வலிமையான கதாபாத்திரத்தில் மலையாள நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் நடித்திருக்கிறார்.

இவருடைய பிறந்தநாளான நேற்று, அவருடைய கதாப்பாத்திரத்திற்கான தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிருத்விராஜின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், '' பிருத்விராஜ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர், 'சலார்' படத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறு நடிகரை நாங்கள் பெற்றிருக்க இயலாது. படத்தில் அவர் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பொருத்திக்கொண்டு நடித்த விதம், அவரது அற்புதமான நடிப்புத் திறமையை நிரூபிக்கிறது.

அவரது தனித்துவமான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரித்விராஜ், பிரபாஸுடன் இணைந்து நடித்திருப்பதும், இவ்விருவரையும் இயக்கியதும் அற்புதமான அனுபவம்'' என்றார்.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'சலார்', 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' வாணி...

2023-02-04 16:05:03
news-image

குத்தாட்ட நடிகையான ரித்திகா சிங்

2023-02-04 13:31:25
news-image

தலைக்கூத்தல் - திரை விமர்சனம்

2023-02-03 17:33:34
news-image

இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் மறைவு

2023-02-03 16:37:15
news-image

நடிகர் மகத் ராகவேந்திரா நடிக்கும் 'காதல்...

2023-02-03 13:29:14
news-image

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்...

2023-02-03 13:29:59
news-image

சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' படத்தின்...

2023-02-03 13:30:40
news-image

பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்...

2023-02-03 13:31:10
news-image

மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

2023-02-02 12:46:37
news-image

மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகும் 'கிறிஸ்டி'...

2023-02-02 12:08:57
news-image

'தளபதி 67' படத்தின் தொடக்க விழா...

2023-02-02 11:48:28
news-image

சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் மூன்றாவது...

2023-02-02 11:48:09