புத்தளம் கல்லடி கிவுல பகுதியில் திங்கட்கிழமை (17) மாலை வீடொன்றின் முற்றத்தில் அரிய வகை உயிரினமான எறும்புண்ணி ஒன்று வீட்டின் உரிமையாளரினால் பிடிக்கப்பட்டது.
குறித்த வீட்டு உரிமையாளர், எறும்புண்ணியொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று அரியவகை உயிரினமான எறும்புண்ணியை உயிருடன் மீட்டுள்ளனர்.
உயிருடன் மீட்கப்பட்ட எறும்புண்ணி தப்போவ சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த உயிரினமான எறும்புண்ணி எதிரிகளைக் கண்டால் உடலை பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளும் குணமுடையவைையெனெ தெரிவித்தனர்.
இவ் உயிரினமானது இலங்கையில் அழிவடைந்து வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM