அமெரிக்காவில் அறுவடைசெய்யப்பட்ட அதிக எடையுள்ள பூசணிக்காய்

Published By: Nanthini

17 Oct, 2022 | 12:35 PM
image

மெரிக்காவில் 2,560 இறாத்தல் (1,161 கிலோகிராம்) எடையுடைய பூசணிக்காய் உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பாரிய பூசணிக்காய் அறுவடை தொடர்பான போட்டியொன்று கலிஃபோர்னியா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில்  மினசோட்டா மாநிலத்தை சேர்ந்த தோட்டக்கலை ஆசிரியர் ட்ராவிஸ் ஜின்ஜர் கொண்டுவந்த பூசணிக்காய் முதலிடம் பெற்றது.

அந்த பூசணிக்காய் 2560 இறாத்தல் எடையுடையதாக இருந்தது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக எடையுள்ள பூசணிக்காய் இதுவாகும்.  

'உலக பூசணிக்காய் நிறுவை சம்பியன்ஷிப்' எனும் இப்போட்டி 49ஆவது தடவையாக கலி`போர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது. 

இப்போட்டியில் 2020ஆம் ஆண்டிலும் ட்ராவிஸ் ஜின்ஜர் முதலிடம் பெற்றிருந்தார்.

ஒரு வாரத்துக்கு முன்னர் நியூயோர்க்கில் அளவிடப்பட்ட, மற்றொருவரின்  2,554 பூசணிக்காயொன்று அமெரிக்காவின் மிகப் பெரிய பூசணிக்காய் என்ற சாதனையை படைத்தது.

இப்போது ட்ராவிஸ் ஜின்ஜரின் 2,560 இறாத்தல் எடையுள்ள இந்த பூசணிக்காய் 'அமெரிக்காவின் மிக அதிக எடையுள்ள பூசணிக்காய்' என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்காக அவருக்கு 23 ஆயிரத்து 40 அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், 2021ஆம் ஆண்டு இத்தாலியில் அறுவடை செய்யப்பட்ட 2,702 இறாத்தல் (1,225 கிலோகிராம்) எடையுள்ள பூசணிக்காயே உலகில் இதுவரை அறுவடை செய்யப்பட்ட மிக அதிக எடையுள்ள பூசணிக்காயாக கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்