உலகக்கிண்ணத்தை மீண்டும் வென்றெடுக்கும் முயற்சியில் மேற்கிந்தியத் தீவுகள்

Published By: Digital Desk 5

17 Oct, 2022 | 09:38 AM
image

(என்.வீ.ஏ.)

இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் இன்று நடைபெறவுள்ள பி குழுவுக்கான முதல் சுற்று போட்டியுடன் ஐசிசி இருபது 20 உலக கிண்ணத்தை மீண்டும் வென்றெடுக்கும் முயற்சியை ஆரம்பிக்கவுள்ளது.

கிறிஸ் கேல், டெரன் ஸ்மித், கீரன் பொலார்ட், ட்வேன் ப்ராவோ, சுனில் நரேன் போன்ற பிரபல வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் நிக்கலஸ் பூரண் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் இம்முறை திறமையாக விளையாடி வெற்றிகளை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரிபியன் சம்பியன்ஸ் லீக் இருபது 20 போட்டியில் வெகுவாக பிரகாசித்த பலர் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெறுகின்றனர். அவர்களில் சிலர் இண்டியன் பிறீமியர் லீக்கிலும் விளையாடிய அனுபவசாலிகள் ஆவர்.

'அனுபவசாலிகளும் இளம் வீரர்களும் கொண்ட எமது அணி சமபலம்வாய்ந்தது. நாங்கள் இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்றபோது (2012, 2016) மிகப் பிரபல்யமான சிறந்த வீரர்கள் அணியில் இடம்பெற்றனர்.

கடந்த வருடமும் சில பிரபல வீரர்கள் இருந்தபோதிலும் எம்மால் பிரகாசிக்க முடியாமல் போனது.  நாங்கள் ஓரணியாக விளையாடினால் எல்லாம் நலமாக அமையும' என மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் நிக்கலஸ் பூரண் தெரிவித்தார்.

இன்றைய போட்டிக்கு முன்னர் நேற்று கருத்து வெளியிட்ட அவர்,

'கடந்த வருடம் அவுஸ்திரேலியா உலக சம்பியனானது. அந்த அணியிலும் பிரபல வீரர்கள் பெரிய அளவில் இடம்பெறவில்லை.

ஆனால் திறமையை நிரூபிக்கக்கூடிய, வெற்றியை   ஈட்டிக்கொடுக்கக்கூடிய வீரர்கள் பலர் இடம்பெற்றனர். அதன் மூலம் அவர்கள் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தனர்.

'எமது அணியும் இந்த வருடம் அதே நிலையில்தான் இருக்கிறது. எமது அணியிலும் பிரபல்யமான பெரிய வீரர்கள் இல்லை. ஆனால், ஓரணியாக நாங்கள் இங்கு (அவுஸ்திரேலியா) உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளோம். அதுதான் முக்கியம். ஒவ்வொருவரும் மற்றவருக்காக விளையாடுவதும், ஓரணியாக விளையாடுவதும் சிறப்பாக அமையும்' என்றார்.

இதேவேளை, இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு கடும் சவாலாக விளையாடும் குறிக்கோளுடன் ரிச்சி பெறிங்டன் தலைமையிலான ஸ்கொட்லாந்து களம் இறங்கவுள்ளது. பயிற்சிப் பொட்டியில் நெதர்லாந்தை வெற்றிகொண்டதன் மூலம் உற்சாகம் அடைந்துள்ள ஸ்கொட்லாந்து இன்றைய தினம் திறமையாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அணிகளுக்க இடையிலான பி குழு ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஹோபார்ட்டில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியைத் தொடர்ந்து பிற்பகல் நடைபெறவுள்ள போட்டியில் அயர்லாந்து - ஸிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20
news-image

ICC T20 உலகக்கிண்ணம் இலங்கையில் மக்கள்...

2026-01-23 16:13:22
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2026-01-22 23:03:17
news-image

பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் அரங்கிற்கு...

2026-01-22 19:07:02
news-image

தேசிய அலைச் சறுக்கல் பெண்கள் பிரிவில்...

2026-01-22 17:17:49
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

2026-01-22 14:33:52
news-image

ஐசிசி ரி20 ஆடவர் உலகக் கிண்ணத்திற்காக...

2026-01-21 21:19:09
news-image

ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில் வழங்கப்படும்...

2026-01-21 20:58:30