(எம்.வை.எம். சியாம்)
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் கடந்த மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் ஒரு மாதத்தில் 900 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ தலைமை நிர்வாக அதிகாரி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் கடந்த மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அதற்கமைய தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் ஒரு மாதத்தில் 900 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
இந்த கோபுரத்தை பார்வையிடுவதற்காக உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் 165,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.
பார்வையாளர்கள் கொள்வனவு செய்யப்படும் நுழைவுச்சீட்டுகள் மற்றும் அதில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் வசதிகள் மூலம் மேற்படி வருமானம் பெறப்படுகிறது.
தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்ட முதல் நாள் 21 வெளிநாட்டவர்கள் மற்றும் 2,612 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து பார்வையிட்டதில், அன்றைய நாள் 15 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM