(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண ஏ குழுவுக்கான முதல் சுற்றின் 2ஆவது போட்டியில் நெதர்லாந்து 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
112 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று ஒரு பந்து மீதமிருக்க மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.
பவர்ப்ளே ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களைப் பெற்று சற்று பலமான நிலையில் நெதர்லாந்து இழந்தது. ஆனால், அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற முயற்சித்த போதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததால் தடுமாற்றம் அடைந்தது.
விக்ரம்ஜித் சிங் (10), மெக்ஸ் ஓ'டவ்ட் (23), பாஸ் டி லீட் (14), கொலின் அக்கர்மன் (17) ஆகிய முதல் 4 துடுப்பாட்ட வீரர்களும் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்
14ஆவது ஓவரில் திறமையாக பந்துவீசிய ஜுனைத் சித்திக் 2 விக்கெட்களை வீழ்த்தி ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
ஆனால், அதே ஓவரில் டிம் ப்றிங்ளின் இலகுவான பிடியை அணித் தலைவர் ரிஸ்வான் தவறவிட்டமை நெதர்லாந்துக்கு திருப்புமுனையாக அமைந்து.
அப்போது ஓட்டம் பெறாமல் இருந்த ப்ரிங்ள் 15 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 101 ஓட்டங்களாக உயர்த்தி 7ஆவதாக ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ், 9ஆம் இலக்க வீரர் லோகன் வன் பீக் ஆகிய இருவரும் ஒற்றை, இரட்டைகளாக ஓட்டங்களைப் பெற்று நெதர்லாந்து வெற்றி இலக்கை அடைய உதவினர்.
எட்வேர்ட்ஸ் 16 ஓட்டங்களுடனும் வன் பீக் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
ஆரம்ப வீரர்களான சிராக் பூரியும் மொஹமத் வசீமும் 33 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பூரி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து காஷிப் தாவூத் 15 ஓட்டங்களுடனும் விரித்தியா அரவிந்த் 18 ஓட்டங்களுடனும் களம்விட்டகன்றனர்.
ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்nடுத்தாடிய மொஹம்மத் வசீம் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
மொஹமத் வசீம் ஆட்டமிழந்தபோது ஐக்கிய அரபு இராச்சியம் 16 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால் அடுத்த 4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.
நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரெட் க்ளாசென் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM