மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் : ஹட்டனில் போராட்டம்

Published By: Nanthini

16 Oct, 2022 | 06:29 PM
image

(க.கிஷாந்தன்)

லையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை கடக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்கவில்லை எனவும், இதன் விளைவாக நிலம் உரிமை, மொழி உரிமை, கலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, அதற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) ஹட்டன் நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ஆம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அபிவிருத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்களின் வாழ்நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. 

எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31