துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் ஹெரோயின், துப்பாக்கிகளுடன் சிக்கினார் 

By Nanthini

16 Oct, 2022 | 06:42 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை (ஒக் 15)கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் ராஜகிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் 42 வயதுடையவர் எனவும், அவர் மொரகஸ்முல்ல, ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 84 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. 

மேலும், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கடந்த செப்‍டெம்பர்  28ஆம் திகதி சேதவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம், கடந்த ஜூலை மாதம்  11ஆம் திகதி மாதம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் 12ஆம் திகதி கடற்கரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹின்னிஹாமி பிரதேசத்தில் மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை போன்ற பல்வேறு  குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52