இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுரூபவ் ஒரு மாதகாலத்தினுள் இந்த ஆண்டின் மாபெரும் மலிவு விற்பனை பற்றி டராஸ் அறிவித்துள்ளது.

டராஸ் ‘Black Friday’  ஊக்குவிப்பு மலிவு விற்பனை, உலகளாவிய டராஸ் கலண்டரில் மிக முக்கியமான நிகழ்வு என்பதோடு, ஒன்லைன் கொள்வனவாளர்கள் சம்பந்தமாக வெகு விரைவில் முக்கிய நிகழ்வாக இருக்குமென நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் ‘Black Friday’ என்பது பாரம்பரியமாக நன்றி தெரிவிக்கும் தினத்திற்கு (Thanks Giving) அடுத்து வருவதாகும். கிறிஸ்மஸ் ஷொப்பிங் இன் ஆரம்பமாக அது கருதப்படுவதோடு பெரும்பாலான முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் மலிவு விற்பனையை ஏற்கனவே ஆரம்பித்து விடுகின்றனர்.

கனடா, பிரிட்டன், மெக்சிக்கோ, இந்தியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், லெபனான், நைஜீரியா உட்பட பல நாடுகளில் ‘Black Friday’ மலிவு விற்பனை இடம்பெறுகின்றது. Daraz.lk ஸ்ரீலங்கா என்பதும் இதில் இணைக்கப்பட்டதற்கு எமது நன்றி.

உண்மையான உற்பத்திப் பொருட்களின் விலையில் 70 வீத கழிவுத் தொகையுடன் வாழ்க்கையில் என்றுமே கிடைக்காத ஒன்லைன் ஷொப்பிங் அனுபவத்தை டராஸ் வழங்குகிறது. அதிநாகரீக ஆடைகள், துணைப் பொருட்கள், சுகாதார மற்றும் அழகியல் சாதனங்கள் என்பனவற்றுடன் இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களும் மலிவு விற்பனையில் கிடைக்கின்றன. United Colors of Benetton, Timberland, Triumph, Huawei, Canon, Acer, Skullcandy, Apple, Samsung, Asus உட்பட பல்வேறு வர்த்தக அடையாளங்களை இவை கொண்டுள்ளன.

நான்கு நாட்கள் நீடிக்கும் மலிவு விற்பனை நவம்பர் 25 இல் இருந்து 28 வரை நடைபெறும். இத்தகைய பாரியளவிலான விற்பனை நிறுவனத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதையிட்டு இலங்கையில் டராஸின் வதிவிட முகாமையாளர் சௌராப் சௌஹான் மகிழ்ச்சியடைந்துள்ளார். அறிமுக விழாவில் சகலரும் பங்குபற்ற வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் கொண்டுள்ளார். “சிறந்த வர்த்தக அடையாளங்களுடனான பெருமளவு பொருட்களை இலங்கையில் அறிமுகம் செய்து ‘கறுப்பு வெள்ளி’ மலிவு விற்பனையை முதன் முதலாக ஆரம்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். 70 வீத வரையிலான விலைக்கழிவுகளோடு மிகக் குறைந்த விலைக்கு உன்னத வர்த்தகப் பெயர்களைக் கொண்ட பொருட்களை இலங்கையில் பெற்றுக்கொடுப்பதற்கு எமது டராஸ் குழுவினர் பெருமுயற்சி மேற்கொண்டுள்ளனர்.

உதாரணமாக Black Friday தினத்தில் கொள்வனவு செய்வோருக்கு iPhone 7 ஐ 98,999 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க நாம் ஏற்பாடு செய்துள்ளோம். எமது நிகழ்வின் பிளட்டினம் அனுசரணையாளராக Hutch நிறுவனம் இணைந்து கொண்டுள்ளமை பற்றி மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருவதோடு, கொள்வனவாளர்களுக்கு இது புதியதொரு அனுபவமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

இலங்கையில் ஒரே இடத்தில் ஒன்லைன் ஷொப்பிங் இடம்பெறும் அதிநவீன நிறுவனமான Daraz.lk உலகத் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்கள், கவர்ச்சிகரமான விலைகள் இலவசமாக மீளக் கையளிக்கும் கொள்கை என்பனவற்றுக்குப் பிரபல்யம் பெற்றுள்ளதோடு, பிரச்சினையற்ற ஷொப்பிங் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

பாகிஸ்தான்ரூபவ் பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளிலும் நிறுவனம் செயற்படுவதனால், பல்வேறு உற்பத்திப் பொருட்களின் பிரபல விற்பனையாளர்கள் ஒன்றிணைக்கப்படுகின்றனர். முதன்மை வர்த்தகர்களிடமிருந்து உயர்மட்ட ஷொப்பிங் அனுபவத்தைப் பெற்றுத்தருவதில் டராஸ் எப்போதும் முன்னணி வகிக்கிறது.