பிரித்தானியாவின் தர்மீக பாதுகாப்பற்ற முயற்சி

Published By: Digital Desk 5

16 Oct, 2022 | 09:40 PM
image

லத்தீப் பாரூக்

1980களின் ஆரம்ப கட்டத்தில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக இருந்த அலக்ஸாண்டர் ஹெய்க் அமெரிக்க ஜனாதிபதியாக வரும் கனவோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தைக் கொண்டிருந்தார்.

அந்தக்காலப்பகுதியில் தான் 250க்கும் மேற்பட்ட பலஸ்தீன அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த இஸ்ரேலின் மெனாச்சம் பெகின் அந்த நாட்டின் பிரதமராக இருந்தார்.

அப்போது மெனாச்சம் பெகின் அலெக்ஸாண்டர் ஹெய்க்கிடம் உதிர்த்த வார்த்தைகள் “வெள்ளை மாளிகைக்கான பாதை டெல்அவிவ் ஊடாகத்தான்” என்பதாகும். அமெரிக்காவின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்றால் அவருக்கு யூத சக்திகளின் ஆதரவு இருக்க வேண்டும் என்பதையே அவர் இக்கூற்றுக்கள் மூலம் தெளிவாக அறிவித்தார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஆசனத்தை அலங்கரித்த அத்தனை பேரும், இஸ்ரேலின் சட்ட ரீதியற்ற பின்னணி, சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதன் செயற்பாடுகள், முடிவற்ற குற்றச்செயல்கள், பலஸ்தீன மக்களிடம் இருந்து அவர்களது சொந்த பூமியை சூறையாடி அவர்கள் மீது இழைத்து வரும் தொடர் கொடூரங்கள் என்று எதனையும் கண்டுகொள்ளாதவர்களாகவே இருந்தனர். 

1948இக்கு முன் உலகில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கவே இல்லை. அப்போதிருந்த பலஸ்தீன தேசத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சிறிய எண்ணிக்கையிலான யூதர்கள் ஆகியோர் சமாதானமாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்தனர். 

முதலாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் தான் பலஸ்தீன பிரதேசம் பிரித்தானிய இராஜ்ஜியத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. துருக்கி சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தி அதன் கீழிருந்த பலஸ்தீனத்தை பிரித்தானிய ஆட்சியாளர்கள் தம்வசப்படுத்தினர். 

அன்று முதல் சியோனிஸ யூதர்கள் உலகம் முழுவதும் சிதறிக் கிடந்த தமது சகாக்களை பலஸ்தீன பகுதிகளில் கொண்டு வந்து குடியேற்ற யூதர்களுக்கு தேவையான முழு ஆதரவையும் பிரித்தானியா வழங்கியது. 

தற்போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் அடிச் சுவட்டைப் பின்பற்றி புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் டெல்அவிவ் நகரில் இருக்கும் இஸ்ரேலுக்கான பிரித்தானிய தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு இடம்மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 

அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தெடரின் போது பிரதான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்ட வகையில் இதுவரை பிரித்தானியாவில் பதவி வகித்த பிரதமர்களில் மிகத் தீவிரமான இஸ்ரேல் ஆதரவாளரான பிரதமர் லிஸ் டிரஸ் தனது நீண்டகால நண்பரான இஸ்ரேல் பிரதமர் யாயிர் லெபிட்டை சந்தித்து டெல்அவிவ் நகரில் உள்ள தனது நாட்டு தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு இடம்மாற்றத் தான் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்

பிரித்தானிய பிரதமரின் இந்த முடிவு பிரித்தானியாவில் நீண்டகாலமாக மார்க்கிரட் தட்சர் முதல் பொரிஸ் ஜோன்ஸன் வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கைகளில் வியக்கத்தக்க மயக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

பிரித்தானிய தூதரகத்தை இடம்மாற்றும் இந்த முடிவு பலஸ்தீனத்துக்கான உத்தேச இருநாட்டுத் தீர்வையும் அத்தோடு பிரித்தானியாவுடனான தங்களது உறவுகளையும் பாதிப்பதாகவே முடியும் என்று பலஸ்தீன தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“பிரித்தானியாவின் இந்த செயற்பாடு தார்மிக ரீதியாகப் பாதுகாப்பற்றது, சட்ட ரீதியாக கேள்விக்குரியது, அரசியல் ரீதியாக தீங்கு விளைவிக்கக் கூடியது” என்று அவி ஷாலெய்ம் என்ற பத்தி எழுத்தாளர் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை இடம் மாற்றுவது தொடர்பான ஒரு மீளாய்வுத் தேவைக் குறைவான ஒரு வெளிநாட்டு கொள்கை விடயம் பற்றி சிந்திப்பது கூட கடினமானது என்று அவர் மேலும் விவரித்துள்ளார்.

பிரித்தானிய தூதரகத்தை இடம்மாற்றுவது பற்றிய பிரதமர் லிஷ் டிரஸ்ஸின் முடிவு ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் மூவரால் மிக வன்மையாகக் கணடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐ.நா நிபுணர் மைக்கல் லங்க் மற்றும் ஆர்தி இம்ஸீஸ் ஆகியோர் “இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையில் விரிவான ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுகின்ற வரைக்கும் பிரித்தானிய தூதரகம் டெல்அவிவ் நகரில் தான் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலம் வரை ஐ.நா நிபுணர்களாக இருந்தவர்களும், இன்னமும் அந்தப் பதவியில் இருப்பவர்களும், விசேட அறிக்கையிடும் அதிகாரிகளும் 1967இல் பலஸ்தீனப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது முதல் அங்கு இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களோடு சேர்த்து மற்றொரு ஐ.நா. நிபுணரும் பிரித்தானிய பிரதமரின் முடிவை வன்மையாகக் கணடித்துள்ளதோடு அந்த முடிவு மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட தவறுகளோ செய்வதால் அது சரியென்று ஆகிவிடாது. ஜெரூஸலத்தில் பண்புகளில், அந்தஸ்த்தில், மக்கள் பரம்பளில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் சட்ட ரீதியாக எந்தத் தாக்கமும் அற்றவை. அவை செல்லுபடியற்றவை, இரத்துச் செய்யப்பட வேணடியவை என்று தற்போதைய ஐ.நா. விசேட அறிக்கையாளர் பிரன்ஸெஸா அல்பெனஸே தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வெஸ்ட்மினிஸ்டரின் அதிமேற்றிராணியார் கர்தினால் வின்ஸன்ட் நிக்கலஸ் இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெரூஸலத்துக்கு மாற்றும் தனது முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கேட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேள்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான இவர் பிரதமரின் முடிவு குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு பிரதமருக்கு கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிரந்தர சமாhனத்துக்கான சகல சாத்தியமான வழிகளையும் பிரமதரின் தூதரக இடமாற்ற முடிவு மிகக் கடுமையாகப் பாதிக்கும். அத்தோடு அது பிரித்தானியாவின் சர்வதேச கீர்த்தியையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்று கர்தினால் நிக்கலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெரூஸலம் தொடர்பாக இதுவரை இருந்து வருகின்ற சர்வதேச நிலைப்பாடுகள் அது சம்பந்தமான ஐக்கிய நாடுகள் தீர்மானங்களுக்கு இசைவாக பேணப்பட வேண்டும் என்பதே பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் மற்றும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனப் பகுதிகளில் உள்ள திருச்சபைத் தலைவர்கள் ஆகியோரின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்றது என்பதையும் அவர் நினைவு படுத்தியுள்ளார்.

“ஜெரூஸலம் நகரம் ஒரு பொதுவான பரம்பரை சொத்தாகப் பேணப்பட வேண்டும். எந்த ஒரு தரப்பினதும் ஏகபோக உரிமையாக அது ஒரு போதும் ஆகிவிடக் கூடாது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்பேர்ட் பல்கனலைக்கழகத்தின் சர்வதேச விவகாரத்துறை பேராசிரியரான அவி ஷலெய்ம் தெரிவித்துள்ள கருத்தில் பிரதமரின் இந்த முடிவு அழிவை ஏற்படுத்தக் கூடியது. பெல்பேர் பிரகடனத்தின் பின் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட மிகவும் மூர்க்கத்தனமான ஒரு தாக்குதலாகவும் இதை கருத முடியும். 

1967 முதல் ஆக்கிரமிப்பு வெறியில் மூழ்கிப்போன ஒரு நாடாகவே இஸ்ரேல் காணப்படுகின்றது என்பதே சகிக்க முடியாத சோகமானதோர் உண்மையாகும். எந்தவொரு உண்மையான நண்பனும் தனது நண்பன் இவ்வாறு போதையில் மூழ்கியிருப்பதை ஊக்குவிக்க மாட்டான் மாறாக அதிலிருந்து அவனை விடுவிக்கவே முயல்வான் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22