இலங்கையில் ஜே.வி.பி கிளர்ச்சி, புலிகள் உட்பட ஆயுதக் குழுக்களின் சண்டைகளுக்கும் அழிவுகளுக்கும் மத்தியில் வறுமை ஒழிப்புத் திட்டமான “சமூர்த்தி” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க வறுமை, கல்வியை தொடர்வதற்கு தடையல்ல என்பதையும் தெரிவித்தார். 

திவிநெகும சமூர்த்தி திட்டத்தின் கீழ் கிங்கெதர திட்டத்தின் கீழ் 20,000 மாணவர்களுக்கு ரூபா 1500 வீதம் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சி இன்று கொழும்பு “நெலும் பொக்குன” (தாமரைத் தடாகம்) மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் உரையாற்றும் போதே சமூக வலுவூட்டல்கள் மற்றும் நலன்புரிகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.