ரயில் சேவையின் செயற்றிறன் மற்றும் பாதுகாப்புக்காக  ரயில்களில் ஜீ.பி.எஸ் தொழினுட்பம் (அமைச்சரவை முடிவுகள்)

Published By: Ponmalar

23 Nov, 2016 | 03:13 PM
image

புகையிரத இயக்க நடவடிக்கைகளை மிகவும் செயற்றிறன் மிக்க முறையில் மற்றும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக ரயில்களில் ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரயில்களின் வேகம், பாதுகாப்பு மற்றும் செயற்றிறன் என்பவற்றை அவதானிப்பதற்காக குறித்த ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வழங்கிய ஆலோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகள் பின்வருமாறு...

01.ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல் 

ஊழல் தடுப்பு புதிய நிறுவன முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் வரை பாரிய குற்றங்கள் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கும் குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வசதிகளை வழங்குவதற்கும் 2015ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் தடுப்பு குழு செயலகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. இராணுவ வைத்தியசாலை (நாராஹேன்பிட்ட) வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை செயற்படுத்தல் 

கொழும்பு நாராஹேன்பிட்ட பகுதியில் மீள ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ வைத்தியசாலை வேலைத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட கட்டுமாண பணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. 

குறித்த வைத்தியசாலையை அனைத்து வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்றுவதற்காக அதன் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளன. 

மூன்றாம் கட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட தொகுதிகள் மூன்றினை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 7,088.32 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் இராணுவ வைத்தியசாலை வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை செயற்படுத்துவதற்கும்,  குறித்த வேலைத்திட்டத்தை 2017ம் ஆண்டு ஆரம்பிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு

அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. இலங்கையினுள் இரத்தினக்கற்கள் அகழ்வாய்வு மற்றும் மதிப்பீடு

இலங்கையிலுள்ள நிலப்பரப்பில் 70% பரப்பில் இரத்தினக்கற்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 10% பகுதியிலேயே இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுகின்றது. தற்போது இனங்காணப்படாத இரத்தினக்கற்கள் காணப்படுவதாக ஊகிக்கப்படும் பகுதிகளை இனங்கண்டு வரைபடத்துடன் கூடிய முழு தகவல் களஞ்சியம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும், சூழலுக்கு உகந்த மிகச் சரியான முறையில் இரத்தினக்கற்கள் அகழ்வினை மேற்கொள்வதற்கான செயன்முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காகவும்,  நிலையான இரத்தினக்கல் அகழ்வு தொழிற்துறையொன்றுக்காக வழிகாட்டல் முறையொன்றை தயாரிப்பதையும் நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‘இலங்கையினுள் இரத்தினக்கற்கள் அகழ்வாய்வு மற்றும் மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டத்தை 2017 தொடக்கம் 2021 வரையான காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. கருணைமிக்க தந்தமுள்ள யானைகளின் பாதுகாப்பு மற்றும் விருத்தி செய்தல் 

விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள யானைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை நிலைநாட்டுவதற்காக அச்சட்டத்தின் கீழ் கட்டளைத் தயாரித்து அதனை வெளியிடுவது தொடர்பில் நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. புகையிரத இயக்க நடவடிக்கைகளை மிகவும் செயற்றிறன் மிக்க முறையில் மற்றும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக ‘உலக அமைவு அமைப்பு’ (GPS) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல் 

புகையிரத இயக்க நடவடிக்கைகளை மிகவும் செயற்றிறன் மிக்க முறையில் மற்றும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அதனடிப்படையில் இலங்கை புகையிரத சேவைக்கும் பொது மக்களுக்கும் நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், புகையிரதங்கள் பயணிக்கும் சரியான இடத்தை மற்றும் வேகத்தை வரைபடத்தின் மூலம் மிகவும் சிறந்த முறையில் மேற்பார்வை செய்வதற்கு உகந்த உலக அமைவு அமைப்பு (GPS) முறையினை அடிப்படையாகக் கொண்ட ‘புகையிரத இயக்க மற்றும் தகவல் அமைப்பொன்றினை’ (Train Operating and Information System) பாதுகாப்பு அமைச்சின் மூலம் கொள்முதல் செய்து தற்போது பயன்படுத்தப்படும் புகையிரத நேர குறித்துக் காட்டும் அமைப்புடன் இணைத்து செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 204வது சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தல் 

2015ம் ஆண்டில் இடம்பெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 104வது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ‘முறையற்ற பொருளாதாரத்தில் இருந்து முறையான பொருளாதாரம் வரை மாறுதல் தொடர்பிலான அதன் 204வது சிபாரிசினை’ பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. தேசிய தரக் கொள்கை 

இலங்கையில் பொருள் மற்றும் சேவைகளின் தரத்தினை உயர்த்தும் நோக்கில் முதலாவது தரக் கொள்கை 1998ம் ஆண்டு செயற்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் அபிவிருத்தி செயன்முறைகளை கவனத்திற் கொண்டு, சுகாதாரம், கல்வி, வீதி, போக்குவரத்துடன் சந்தை மற்றும் வணிகம் ஆகிய துறைகளை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மீது கவனம் செலுத்தி மற்றும் பரந்த பங்குபற்றல் முறையினை பின்பற்றி புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ‘தேசிய தரக் கொள்கை’ செயற்படுத்துவது தொடர்பில் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இலங்கை டிஜிடல் சுகாதார கண்டுபிடிப்பு மற்றும் வணிகமயமாக்கலுக்கான நிறுவனத்தை (Sri Lanka Institute of Digital Health Innovation & Commercialization) ஸ்தாபித்தல்

டிஜிடல் சுகாதார முறையினை பயன்படுத்தி இலங்கைக்கு உயரிய இலாபத்தினை ஈட்டும் நோக்கில், நவீன டிஜிடல் மற்றும் உயரிய தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் புதிய தரத்திலான கண்டுபிடிப்புக்களை விருத்தி செய்வதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட வணிக மற்றும் ஆய்வமைப்புடன் ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான முறையில் ‘இலங்கை டிஜிடல் சுகாதார கண்டுபிடிப்பு மற்றும் வணிகமயமாக்கலுக்கான நிறுவனத்தை’ அரச – தனியார் அமைப்பினரின் ஒத்துழைப்புடன் ஸ்தாபிப்பது தொடர்பில் தொழில்நுட்ப, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. உயர் தரத்திலான ஆயர்வேத ஒளடத வகைகளின் உற்பத்திகளை உயர்த்துவதற்காக ஒளடத மூலங்களை பயிரிடும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல் 

விவசாயிகளை இணைத்துக் கொண்டு, உயர் தரத்திலான ஒளடத உற்பத்திகளை மேற்கொள்வதற்காக ஒளடத பயிர்செய்கை வேலைத்திட்டமொன்றை இரத்தினபுரி, குருநாகல், அநுராதபுரம், மொனராகலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும், இலங்கை ஆயுர்வேத ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் விற்பனை வலையமைப்பின் ஊடாக இவ்வேலைத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒளடத மூலங்களை கொள்வனவு செய்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற சேவைகளுக்காக அறவிடப்படுகின்ற கட்டணத்தில் திருத்தம் செய்தல் 

கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற சேவைகளுக்காக அறவிடப்படுகின்ற கட்டணத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் 1990/12ஆம் இலக்க 2016-10- 25ம் திகதி வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை, பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் றிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. விதைகள் மற்றும் உற்பத்தி பொருற்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் 

நாட்டில் விவசாயத்துறையில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் உயர் தரத்திலான விதைகள் மற்றும் உற்பத்தி பொருற்களை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தை கமத்தொழில் அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்களுக்கு உரித்தான பயன்பாடற்று காணப்படும் இடங்களை பயன்படுத்தி அரச மற்றும் தனியார் துறையினரை இணைத்துக் கொண்டு செயற்படுத்துவதற்கு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. வழக்கு தாமதங்களினை குறைக்கும் நோக்கில் முன் விசாரணை நடைமுறையொன்றுக்கான (Pre-Trial Procedures) நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 

தற்போது நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளின் தாமதத்தை குறைக்கும் நோக்கில் முன் விசாரணை நடைமுறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் அது தொடர்பில் ஏற்பாடுகளை மேற்கொண்டு சட்ட வரைஞர்களினால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட, திருத்த சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தை திருத்தஞ் செய்தல் 

தற்கால தேவைகளின் நிமித்தம் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தை திருத்தஞ் செய்வதற்கு நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. ஊடக உரிமைகள் மற்றும் தர நிர்ணயம் தொடர்பில் பொது மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பித்தல்

அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் (வானொலி மற்றும் தொலைக்காட்சி) மற்றும் இந்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இணையத்தளங்களில் செய்தி உள்ளடக்கங்களை சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்வான்மை தரத்துக்கு மற்றும் செயற்பாட்டு ஒழுங்கின் அடிப்படையில் கண்கானிப்பதற்கான சுயாதீன ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட ஆணைக்குழுவுக்காக முறையான பொதுமக்கள் ஆலோசனை செயன்முறையொன்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் பாராளுமன்ற மறுசிரமைப்பு மற்றும் ஊடகத் துறை அமைச்சர் எனும் ரீதியில் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. யாழ்ப்பாணம் அச்சுவெலி பிரதேசத்தில் நிலம் கீழிறங்குதல் 

யாழ்ப்பாணம் அச்சுவெலி பிரதேசத்தில் காணப்படும் நிலப்பிரதேசமானது நிலத்தை விட கீழிறங்கும் சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான காரணங்களை தெளிவுபடுத்திக் கொள்வதற்கும், குறித்த நிலப்பகுதியை எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவான முறையில் தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மூலம் இந்நிலைமை குறித்து மேலதிக ஆய்வினை மேற்கொள்வது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. பொலிஸ் விசேட செயலணியின் அதிகாரிகளுக்காக தங்குமிட வசதிகளை விருத்தி செய்தல்

பொலிஸ் விசேட செயலணியின் கீழ் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் விசேட சேவைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு போதியளவு தங்குமிட வசதிகள் இன்மை பாரிய பிரச்சினையொன்றாக காணப்படுகின்றது.

இதற்கு தீர்வாக கொழும்பு நகருக்கு அருகில் அமைந்துள்ள கோணஹேன முகாம் சூழலில் செயலிழந்த நிலையில் காணப்படும் வீட்டினை அகற்றி அதற்கு பதிலாக 250 அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்கும் வகையில் இரு மாடிகளைக் கொண்ட தங்குமிட விடுதியொன்றை 74.9 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பதற்கு சட்டம், ஒழுங்கு மற்றும் தென் பகுதி அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. இலங்கை இராணுவத்தினருக்கு விளையாட்டு பாதணிகளை கொள்வனவு செய்தல்

இலங்கை இராணுவத்தினருக்கு தேவையான விளையாட்டு பாதணி சோடிகள் 20,000 கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபாரிசின்அடிப்படையில் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. மாலி இராச்சியத்தில் அமைதி காக்கும் நடவடிக்கையில் பங்கேற்கின்ற போராடும் படையணிக்கு அவசியமான உபகரணங்களை கொள்வனவு செய்தல்

மாலி இராச்சியத்தில் அமைதி காக்கும் நடவடிக்கையில் பங்கேற்கின்ற போராடும் படையணிக்கு அவசியமான மிதிவெடிகளை அகற்றுதல் மற்றும் வெடிக்கும் பொருட்களை செயலிழக்கச் செய்வதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. கொழும்பு நகரின் தெற்குப் பகுதியில் வருமானம் இன்றிய நீரின் (Non Revenue Water) அளவைக் குறைப்பதற்கான தொகுதி புனருத்தாபனம் செய்வதற்கான ஒப்பந்தம்

கொழும்பு நகரின் தெற்குப் பகுதியில் வருமானம் இன்றிய நீரின் (Non Revenue Water) அளவைக் குறைப்பதற்கான வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற கொழும்பு கழிவு நீர் மற்றும் நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் 02 ஆம் கட்டத்தை புனருத்தாபனம் செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் வழங்குவதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. வருமானம் இல்லாத நீர் உள்ள பிரதேசங்களின் முகாமைத்துவம் மற்றும் கட்டிட மேற்பார்வை ஆலோசனை ஒப்பந்தம் 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற கொழும்பு கழிவு நீர் மற்றும் நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டத்தில் உற்பத்தியாகின்ற வருமானம் இல்லாத நீர் உள்ள பிரதேசங்களின் முகாமைத்துவம் மற்றும் கட்டிட மேற்பார்வை ஆலோசனை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் வழங்குவதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. நோயாளர்களுக்கு மருத்துவ தடுப்பூசிகளை ஏற்றுவதற்காக பாவிக்கப்படுகின்ற உபகரணங்களை கொள்வனவு செய்தல் 

நோயாளர்களுக்கு அவசியமான ஐ.வி கெனியுலா (இன்ஜெக்சன் போட் உடன் மற்றும் இன்றி) பல்வேறு அளவுகளில் கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரலினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. அரச வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே இயந்திரங்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற ப்ளு பேஸ் உலர் இமேஜின் பிலிம்ஸ் (35cm ∙ 43 cm) 820,000 இனை கொள்வனவு செய்தல் 

அரச வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே இயந்திரங்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற ப்ளு பேஸ் உலர் இமேஜின் பிலிம்ஸ் (35cm ∙ 43 cm) 820,000 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. நோயாளர்களின் குருதியின் அளவு குறையும் சந்தர்ப்பங்களில் பெற்றுக் கொடுக்கும் ஒளடதங்களை கொள்வனவு செய்தல் 

நோயாளர்களின் குருதியின் அளவு குறையும் சந்தர்ப்பங்களில் பெற்றுக் கொடுக்கும் சோடியம் குளோரைட் உடற்செலுத்தல் BP 0.9% W/V அல்லது சோடியம் குளோரைட்டு தடுப்பூசி யுஎஸ்பி 0.9% W/V மில்லி லீற்றர் 500 போத்தல்கள் 7,200,000 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. தேசிய எல்லை முகாமைத்துவ குழுவை நிறுவுதல் 

நாட்டின் எல்லை என்பது தேசிய பாதுகாப்பின் முதன்மைக்குரிய காரணியாவதுடன் பல்வேறுபட்ட ஒழுங்குபடுத்தல் மற்றும் தொடர்புடைய தொழிற்பாடுகளில் ஈடுபடுவதுடன் நாட்டின் இறைமையை வெளிக்காட்டுதல் முக்கியமானதாகும்.

தற்போது மக்களின் எல்லை நகர்வானது 6.05 மில்லியனிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 200 மில்லியன் கிலோ கிராமிற்கும் அதிகமான பயணப்பொதிகள் எங்களது நாட்டு எல்லையை கடக்கின்றன.

இதனடிப்படையில் மக்களினது நகர்வும், பொருட்களினது அசைவும் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகரித்துள்ளதுடன், பாதுகாப்பு, சமூக ஒழுங்கு மற்றும் பொருளாதார செழிப்பு என்பவற்றை பராமரிக்கவும், அழியாமற் பேணுவதற்கும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டதாக முகாமைத்துவம் செய்தல் அவசியமாகும்.

அதனடிப்படையில் தேசிய எல்லை முகாமைத்துவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களையும் கவனத்திற் கொண்டு அரச சிரேஸ்ட அதிகாரிகள், கொள்கை தயாரிப்பாளர்கள் உள்ளடங்கிய தேசிய எல்லை முகாமைத்துவ குழுவை நிறுவுவது தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. நகர இடைத்தொடர்பு பாதைகளினை அபிவிருத்தி செய்தல் 

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் கொழும்பு, மொரடுவை, மஹர, அவிஸ்ஸாவெல்ல ஆகிய பிரதேசங்களில் காணப்படும் 30 கி.மீ. கொண்ட நகர இடைத்தொடர்பு பாதைகள் 26 இனை 208.5 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் மாகாண பாதை அபிவிருத்தி அதிகார சபையின் (மேல் மாகாணம்) மூலம் செப்பனிட்டு அபிவிருத்தி செய்வது தொடர்பில் பெரு நகரம் மேல் மகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27.தேசிய காப்புறுதித் தினமொன்றை பிரகடனப்படுத்துதல்

காப்புறுதியின் அவசியத்தை உணர்ந்து அனைத்து குடும்பங்களும் காப்புறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வருடா வருடம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி தேசிய காப்புறுதி தினமாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19