(நெவில் அன்தனி)
மெல்பர்ன் ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் முதலாவது போட்டியில் இலங்கைக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இலங்கை 10 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 75ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகின்றது.
இருபது உலகக் கிண்ண முதலாம் சுற்றில் (தகுதிகாண்) இலங்கையும் நமிபியாவும் ஏ குழுவில் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நமிபியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
ஒரு கட்டத்தில் 15ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்த நமிபியாவை, ஜான் ஃப்றைலின்க், ஜொஹானெஸ் ஸ்மித் ஆகிய இருவரினது அபார துடுப்பாட்டம் பலமான நிலையில் இட்டது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இருபது 20 உலகக் கிண்ண முதலாம் சுற்றில் நமிபியா 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
எனினும் இந்த வருடம் அதை விட திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நமிபியா, இலங்கைக்கு கடும் சவாலை விடுத்துள்ளது.
ஆரம்ப வீரர்களான மைக்கல் வென் லிஞ்சென் (3), டிவான் லா குக் (9) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களில் ஆட்டமிழக்க நமிபியாவின் மொத்த எண்ணிக்கை 16 ஓட்டங்களாக இருந்தது.
அதன் பின்னர் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஜான் நிக்ல் லொவ்டி ஈட்டன் 12 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார். (35-3 விக்.)
எனினும் ஸ்டெபான் பார்ட் (26), அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்முஸ் (20) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலைக்கு நகர்த்தினர்.
அவர்கள் இருவரும் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்ததுடன் டேவிட் வைஸ் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (14.2 ஓவர்களில் 93 - 6 விக்.)
ஆனால், ஜான் ஃப்றைலின்க், ஜொஹானெஸ் ஸ்மித் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து நமிபியாவின் மொத்த எண்ணிக்கையை 163 ஓட்டங்களாக உயர்ந்த்தினர்.
ஜான் ஃப்றைலின்க் 28 பந்துகளில் 44 ஓட்டங்களையும் ஜொஹான் ஸ்மித் 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி 164 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு சற்றுநேரத்தில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இலங்கை பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹேஷ் தீக்ஷன, அணிக்கு மீள்வருகை தந்த துஷ்மன் சமீர, சாமிக்க கருணாரட்ன, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM