இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2014 இல் கிடைத்த வெற்றிக்களிப்பு 2022 இலும் கிடைக்குமா?

16 Oct, 2022 | 08:12 AM
image

கிரிக்கெட் ரசிக பட்டாளத்தின் ஈர்ப்பை கொண்ட இருபதுக்கு - 20 உலகிகிண்ண தொடர் இம்முறை அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 16 திகதி முதல் நவம்பர் 13 திகதி வரை நடைபெறவுள்ளது. 

மொத்தமாக 16 அணிகள் பங்கு கொள்ளும் இந்த தொடரில் முதல் சுற்றுடன் சேர்த்து 45 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த போட்டிகளைக் கண்டுகளிக்க ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இந்த போட்டித் தொடரில் முதல் முறையாக இரண்டு தடவை கிண்ணத்தை கைப்பற்றிய மேற்கிந்த தீவும் ஒரு முறை கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியும் தகுதிகாண் போட்டியில் பங்கு கொண்டு அடுத்த சுப்பர் 12 சுற்றுக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டில் ஏற்கனவே தகுதிகாண் சுற்றில் அனைத்து போட்டிகளையும் வெற்றி பெற்று சென்றது ஒரு புதிய அனுபவத்தை தந்தது என அணித்தலைவர் தசுன் சானக்க உட்பட வீரர்கள் கூறியிருந்தார்கள்.

இம்முறை தொடரருக்கு நாங்கள்  ஆசியாவில் ஜாப்பாவான்கள் என்ற பெயருடன் தான் களமிறங்க உள்ளோம். இம்முறை ஆசியக் கிண்ணத்தின் வெற்றியை தொடர்ந்து இலங்கை அணி மீது நம்பிக்கை அதிகமாகவே காணப்படுகின்றது.

2014 ஆண்டிற்கு பிறகு ஐசிசி கிண்ணம் கைப்பற்றியது மிகவும் வரவேற்க வேண்டிய விடயம். அனுபவ வீரர்களின் ஓய்வின் பின் பல சரிவுகள் ஏற்பட்ட போதிலும் இந்த அணி மீண்டு வரும் என்று காத்திருந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும் இந்த ஆசிய கிண்ணம் எவ்வளவு முக்கியானமான வெற்றி என்று! அதுமட்டுமல்லாமல் இன்று இலங்கை அணி உலக கிண்ணத்தை கைப்பற்ற கூட ஒரு அணி கட்டமைப்பு கொண்டு உள்ளது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இவை அனைத்துக்கும் காரணமே தசுனின் இளம் படை தான். 2019 ஆண்டில் தசுனின் வெற்றிப்பயணம் தொடங்கிய போது லாகூரில் இலங்கை அணி 1996 உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றினோம் இதே இடத்தில் நமது வெற்றி பயணத்தை ஆரம்பிம்போம் என கூறிய வார்த்தைகள் எல்லாம் பொன்னான வாக்கியங்கள் என்று கூறவேண்டும்.

ஆசியக் கிண்ணத்தில் முதல் போட்டியில் தோல்வியின் போது சரி முடிந்தது எல்லாம், இது எல்லாம் நம் பார்வைக்கு பழக்கபட்டவைதானே  என தொலைகாட்சியை நிறுத்திய ரசிகர்கள் இருந்து இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் சமூக ஊடகங்களாக இருக்கட்டும், சில தொலைகாட்சிகளில் விளையாட்டு செய்திகளின் நேரத்தை ஒதுக்கி திட்டி தீர்த்தார்கள்.

ஆனால் இதற்கு எல்லாம் வாய் அடைத்துப் போனதுபோல் நடக்கும் வகையில் இறுதி பெறுபெறுகள் அமைந்திருந்தது. அந்த முழுத்தொடரிலும் முழுக்க முழுக்க அணிக்கு சரியாக கட்டமைப்புடன் சரியான திட்டங்களை வகுத்து இந்தியாவை, பாகிஸ்தானை இரண்டாம் சுற்றில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை வெற்றிப்பெற்று நம்மை ஆனந்த உலகிற்கு எடுத்த தருணத்தை எந்தவொரு கிரிக்கெட் ரசிகனும் மறக்கமாட்டார்கள்.

இறுதிப்போட்டியில் ஒரு தருணத்தில் நாணச்சுழற்சி தோல்வியடைய போட்டி பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தது. துடுப்படுத்தாட ஆரம்பித்த இலங்கை வீரர்களுக்கு 3 விக்கெட் இழக்க அவ்வளவுதான் போட்டி முடிந்தது என்று நினைத்து இருப்பார்கள். 

அந்த ஒரு தருணத்தில் இலங்கை ரசிகன் என்ற வகையில் மனதில் இருந்த ஒரே எண்ணக்கரு “ 2014 முதல் ஐசிசி தொடர்களா நம் அணி இறுதிப்பபோட்டி வந்து விடும் என கவலை வேண்டாம் ஆனால் இம்முறை 8 வருடங்களின் பிறகு அதே தருணத்தில் வந்து தோல்வி அடைந்து விடுமோ என்ற ஏங்கி தவித்த ஒவ்வொரு தருணம் மனதில் இருக்கும்”

அதுமட்டுமல்லாமல் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விடயம் தான் அந்த ஒரு தருணம் உணர்த்தி இருந்தது. ஏன் என்றால் ஒருகட்டத்தில் சிம்பாப்வே உடன் தொடர் தோல்வி, பங்காளதேஷிடம் முதல் முதலாக டெஸ்ட் தோல்வி, யாரும் நினைத்து பார்க்க முடியாமலுக்கு ஆப்கானிஸ்தானுடன் தோல்வி அடைந்து நமது கிரிக்கெட் மீது மிகவும் அவுதூறு பேசிய காலங்களிலும் இலங்கை போட்டியை மனதை வெறுக்கும் அளவிக்கு கொண்டு சென்றது.

ஆனால் ஒரு கோணத்தில் நம் கிரிக்கெட்டையும் நம்பிக்கை வைத்த ஒரு ரசிகப்பட்டாளம் இருந்து கொண்டே இருந்தது. எந்த போட்டியாக இருக்கட்டும் தொலைகாட்சியில் அல்லது தொலைபேசியில் போட்டி பெறுபேறுகளை பார்த்து கொண்டு இருப்பார்கள் . அன்றைய போட்டி மிக மோசமான தோல்வி அடைந்திருந்த தருணத்தில் இல்லை அடுத்தபோட்டியின் போது இன்று சற்று நல்லமுறையில் விளையாடுவார்கள் அசட்டு தைரியத்துடன் போட்டியை கண்டுகழித்த ரசிகர்ளுக்கு 2022 ஆசிய கிண்ணத்தை வெற்றி பெற்று கண்களில் ஆனந்த கண்ணீர் மல்க தொலைகாட்சி முன் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணியை பார்த்து சந்தோசப்பட்டு இருப்பார்கள்

நம்மவர்கள் கடந்து வந்த வெற்றிபாதையின் போது முன்னால் பயிற்சி விப்பாளர்கள் முக்கியமான இளம் வீரர்களை வித்திட்ட மிக்கியை நன்றி மறக்க கூடாது. மிக்கி இருந்த காலத்தில் விமர்சனங்கள் இருந்த போதிலும் அதை எல்லாம் தாங்கி கொண்டு மீண்டும் மீண்டும் முமுமையான முறையில் நம்பிக்கை வைத்து பல இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அணிக்கு பக்கபலமான இளம் அணியை பொறுப்புடன் வகுத்து கொடுத்த பெறுமையை மிக்கியையே சேரும்.

அதுமட்டுமல்லாமல் ஆசிய கிண்ணத்தில் மறைந்து இருந்து நம்மவர்களுக்கு உதிவிய ஒரு ஜாம்பாவன் அணியின் ஆலோசகராக செயற்படும் முன்னால் தலைவர் மஹேல. அதுபோக இப்போழுது பயிற்சியாளராக கடமையாற்றும் சில்வர்பூட் இறுதி போட்டியின் இறுதி பந்தின் போது தன்னை அறியாமல் எழும்பி அணிக்கு கரகோசம் கொடுத்த காட்சிகள் எல்லாம் ஒரு தந்தை மகனின் பெறுபெறுகளை பார்த்து சந்தோசம் படும் காட்சிகள் போல் இருந்தது.

இப்படிபட்ட கடந்த கால நினைவுவலைகளுடன் இம்முறை உலகக்கிண்ணத்துக்கு அவுஸ்திரேலியா நோக்கி அணி பறந்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.. 

தசுனின் தலைமையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முன்னர் பல்லேகலயில் பயிற்சி முகாமில் பங்குபற்றிமை குறிப்பிடததக்கது. அதற்கு நமது யோக்கர் கிங் நாயகன் லசித் மாலிங்கவும் இணைந்து அணியுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமை வரவேற்க்கத்தக்கது. 

இலங்கை அணிக்கு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட இருந்தது. எனினும் மழை குறிக்கிட்டதால் அயர்லாந்து அணியுடனா போட்டி முற்று முழுதாக கைவிடப்பட்டது.

ஆனால் சிம்பாப்வே உடனான போட்டியை 33 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. போட்டி கைவிடப்பட்ட போதிலும் நமது அணி வீரர்கள் பயிற்சி முகாம் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை தொடருக்கு தசுனின் தலைமையின் கீழ் 17 பேர் கொண்ட அணி அவுஸ்திரேலியா நோக்கி பயணம் செய்து உள்ளார்கள். தனுஸ்க குணதிலக்க, பெதும் நிசங்க, விக்கெட் காப்பாளராக குசல் மென்டிஸ், சரித்த அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய  சில்வா, வனிந்து ஹசரங்க, மகேஸ் தீக்சன, ஜெப்ரி வன்டர்சே, சாமிக்க கருணாரட்ண, துஸ்மன்த்த சாமிர, லஹிரு குமார, டில்ஷான் மதுசங்க, பிரமோத் மதுஷான், மேலதிக வீரர்களாக அசேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்கரம இவர்களுடன் அணியின் ஆலோகராக கடமையாற்ற மஹேல மீண்டும் இணைந்துள்ளார். 

கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரின் போது மஹேலவின் வருகை அணி வீரர்களுக்கு புதிய ஒரு உத்வேகத்தை கொடுத்திருந்த போதிலும் அவரால் முழுத்தொடரிலும் இலங்கை அணியுடனும் இருக்க முடியவில்லை ஆனால் இம்முறை முழுத்தொடரிலும் அவரின் பங்களிப்பு இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலமே.

அணியின் வீரர்களின் வரிசையில் தலைவர் தசுனின் துடுப்பாட்டமும் சரி அணியை  ஒற்றுமையான முறையில் நடத்தி செல்வதும் சரி வரவேற்க வேண்டிய விடயமாக கருதவேண்டியுள்ளது.. நடந்து முடிந்த ஆசிய கிண்ணத்திலும் மற்றும் அவுஸ்திரேலியா தொடரிலும் பார்க்கையில் அவரின் துடுப்பாட்ட பாணி மிகவும் அருமையாகவே இருந்ததும்.

அதிலும் அவுஸ்திரேலியா அணியுடான 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியை யாராலும் மறக்க முடியாது. வார்த்தைகளாலும் புகழாராம் கூறி முடிசூடிய வெற்றி நாயகனாக வலம் வருகிறார் தசுன். அடுத்தப்படியாக பெதும் நிசங்க, இவர் விளையாட்டு பொருட்களை விட அதிகப்படியாக விரும்பியது துடுப்பாட்ட மட்டை, பந்தை என்று அவரின் தாய் ஒரு நேர்காணலின் போது தெரிவித்து இருந்தார். அன்று ஆனந்த கண்ணீரினால் தனது மகனின் பெருமைகளை கூறிய தாய்க்கு இன்னும் பெருமைகளை சேர்த்த வண்ணம் திகழ்ந்து இருக்கிறார் நிசங்க.

ஆசிய கிண்ணத்தில் அவரின் துடுப்பாட்டப் பாணியை பார்த்து உலக வர்ணணையாளர்களால் புகழப்பட்ட வீரர் இவர். நிசங்க இம்முறை உலகக்கிண்ண போட்டிகளின் போது எமது அணிக்கு மிக முக்கிய வீரர்களில் ஒருவர் அதுமட்டுமல்லாமல் இந்த தொடரின் அதிகூடிய ஒட்டங்களை பெறுவார். அதை பெறுவதற்கு இவரால் முடியும் எனவும் லசித் மாலிங்க தெரிவித்து இருந்தார்.

அடுத்த படியாக குசல் மெண்டிஸ் இப்போழுது இருக்கும் மெண்டா இது இவரின் இரண்டாவது அவதாரம் என்று கூற தான் .ஒருகாலகட்டத்தில் எத்தனை விமர்சனங்கள். இவர் தேவையா ? .இந்த அணிக்கு தொடர்ந்து தேவையா? அதுமட்டுமல்லாமல் போட்டி தடையும் விதிக்கப்பட்ட ஒரு வீராராகவும் இருந்தார். ஏந்த ஒரு மனிதன் அதிகபடியாக மனது புண்படுத்தபடுகின்றானோ அவன் மீண்டு எழுந்தால் அதை இந்த உலகம் பிரமித்து பார்க்கும் அதற்கு சிறந்த உதாரணம் மென்டிஸ். இவரை குறைத்து எடை போட வேண்டாம் இவர் ஒரு உலக தரம் வாய்ந்த வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சி விப்பாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் கூறியது மறக்ககூடாது. அவர் கூறிய அந்த விடயங்களை கடந்த ஆசிய கிண்ணத்தின் போது இந்திய அணியுடன் துடுப்பெடுத்தாடிய விதத்தை பார்க்கும் போது விளங்கி இருக்கும். எனவே மென்டிஸின் துடுப்பாட்ட பாணியில் மீண்டும் எல்லோரும் வரவேற்கும் வகையில் திறமைகளை வெளிகொண்டு வரவேண்டும்.

இவரைப்போல மிகவும் திறமையான ஒரு வீரர்தான் சரித் அசலங்க ஆனால் ஆசிய கிண்ண  போட்டிகளில் வாய்ப்புகளை கொடுத்தும் பெரிதாக சோபிக்க தவறியிருந்தார். 4 போட்டிகளில் கலந்து கொண்டு வெறுமன 8 ஓட்டங்களை பெற்று இருந்தார் ஆனாலும் இவர் கடந்த உலகக்கிண்ண தொடரின் போது அதிக கூடிய ஓட்ட பிரதியை பெற்ற ஒரு வீரர் அதை நாம் மறக்க கூடாது. அதுமட்டுமல்லாவில் பல்லேகேலவில் நடைபெற்ற பயிற்சி முகாமிலும் தீவிர பயிற்சிகளில் பெற்றிருந்தார். இலங்கை கிரிக்கெட் வாரியமும் ரசிகர்களும் அவர்மேல் உள்ள நம்பிக்கை வீண் செய்யமால் மீண்டு வருவார் என எதிர்பார்த்து காத்துகிருக்கின்றோம்.

அடுத்தபடியாக பானுக ராஜபாக்ஷா ஆசிய கிண்ணத்தின் நாயகன் இவர்தான் ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் பெற்ற 71 ஒட்டங்களினால் தான் அன்றைய போட்டியின் போது வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது.

இவர் கிரிக்கெட் இருந்து ஓய்வுப்பெற்று இருந்தால் இவரின் இடத்தை யார் நிரப்பி இருப்பார். அன்றைய போட்டியின் போது. இப்படிப்பட்ட வீரர்களை தக்கவைத்து போட்டிகளின் போது தவறாமல் வாய்ப்புகளை அளிக்கவேண்டும். அதுபோல இந்த உலகக்கிண்ண தொடரிலும் தனது அதிரடியாக துடுப்படுத்தாடுவார் என நம்புகின்றோம்.

இந்த தொடரின் மிக முக்கிய வீரரான தனஞ்சய சில்வா இவரும் ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் ஒரு பக்கம் 3 விக்கெட் வீழந்திருந்த தருணத்தில் இவர் ஓட்டங்களை குவித்து கொண்டு அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருந்தார். இவர் பெற்ற 28 ஒட்டங்களும் அன்றைய போட்டியின் போது மிகவும் முக்கியமானதாகவே அமைந்தது. அவ்வப்போது துல்லியமான பந்து வீச்சாளராகவும் முதலாவது சிலிப்பில் இருந்து அற்புதமாக பிடிகளை பிடித்து அணிக்கு தனது திறமையை நிலைநிறுத்தக்கூடிய வீரர்.

அடுத்தபடியாக வனிந்து ஹசரங்க இந்த உலக்கிண்ணத்தில்  எல்லோராலும் எதிர்பாக்கையில் அனைவரும் கண்காணித்து வருகின்ற வீரர். நடந்து முடிந்த ஆசியக்கிண்ணத்திலும் சரி உலகக்கிண்ண பயிற்சி போட்டியிலும் சரி சகலதுறை ஆட்டத்திலும் பிரகாசிக்கக் கூடிய வீரர். 

இவர் இம்முறை அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் பிரகாசிக்க கூடிய ஒரு வீர்ர் என முன்னாள் ஜாம்பவான் முரளி கூறியிருந்தார். அதுபோக இவரும் மாலிங்கவைப் போன்று முற்காலத்தில் பிரகாசிக்க மாட்டார் என்று நினைத்தவர்கள் ஆனால் இன்று உலகமே பிரமித்து பார்க்கும் அளவிற்கு அணிக்காக பங்களிப்பு செய்துள்ளார் மாலிங்க.  அதுபோலத்தான் இவரும் என்று நம் அணியின் ஆலோசகராகன மஹேல, வனிந்து மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். இம்முறை போட்டிகளிலும் எதிர் அணிக்கு சலாக திகழ்வார்; வனிந்து அதில் எந்த ஐய்யமும் இல்லை.

இவருக்கு இணையான சுழல் பந்து வீச்சில் மஹேஸ் திக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே அணி சுறுசுறுப்பான பாணியில் வெற்றியை சுவைத்திட வேண்டும் என ஏங்கும் சாமிக்க கருணாரட்ண  அணிக்கு மீண்டும் உள் நுழைந்த சமீர, லஹிரு குமார, லகிரு மதுசங்க மற்றும் அனைத்து வீரர்களும் தமது பங்களிப்புக்களை அணிக்காக சரிவர செய்தார்கள் என்றால் உலகக்கிண்ண தொடரின் போது எதிர் அணிக்கு சவாலான போட்டி தன்மையை கொடுக்கலாம்.

இவர்களுடன் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஷ் சில்வவூட், துணை பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஷ்,  அணியின் ஆலாசகராக மஹேல ஜயவர்தன, சுழல் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பியல் விஜேயதுங்க, களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஆகியோரின் ஆலோசனைகளும் திட்டங்களும் வழிவகுத்து கொடுக்க நம்மவர்களின் திறமைகளை வெளிகொண்டு வந்து மீண்டும் ஒருமுறை உலக கிண்ணத்தை கைப்பற்ற வேணடும் என்பதே ஒவ்வொரு இலங்கை அணி ரசிகனினதும் அவா!

ஆசிய கிண்ணத்தின் வெற்றியை சுவைத்த நம்மவர்கள் உலகக்கிண்ணத்தையும் கொண்டு வந்து 2014 நம் நாட்டுக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சியை மீண்டும் நமக்கு தருவார்கள் என காத்திருப்போம்.

இந்த ஆசைகளின் மத்தியில் ஆசியக் கிண்ண தொடரின் பிறகு நம் வீரர்களை பல தொலைகாட்சிகள் பல நிகழ்ச்சிகளுக்கு வரவழைத்து பல நிகழ்வுகளை நடந்தியிருந்த போதும் இந்த நிகழ்வுகளை எல்லாம் 2015 தொடக்கம் 2021 காலகட்டத்தில் செய்து எமது அணியை ஊக்குவித்து இருந்தால் எமது அணி எப்பொழுதோ மீண்டு வந்து இருக்குமோ என்ற ஒரு எண்ணக்கரு உங்கள் மனதில் தோன்றிருக்க கூடும்.

நாம் கடந்து வந்த கஸ்டகாலத்தில் தோல்வியுற்ற போதிலும் மீண்டும் மீண்டும் இந்த வீரர்களை திட்டி திட்டியாவது போட்டிகளை கண்டுகளித்த ரசிகர்களுக்கு அந்த ஒரு தருணம் புரிந்திருக்க கூடும்.

நமது முன்னால் தலைவரும் ஜாம்பவானுமாகிய சங்கா அண்மையில் வழங்கிய நேர்காணலின் போது கூறிய விடயமொன்று தான்,

“எனது மனமும் உள்ளமும் சொல்வது நம் இலங்கை அணி இந்த உலகக்கிண்ணத்தை வெற்றிபெற வேண்டும் என்று தான் . அது நமது அணியால் முடியும் என்று நான் நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாமல் நான் முன்னால் விளையாடிய வீராக ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன் “எமது காலம் முடிவடைந்தது. ஆனால் விளையாடிய விளையாட்டை விட இன்று போட்டி தன்மை மிகவும் வித்தியாசமானது.  அதை இவ் வீரர்கள் சரியான முறையில் திட்டங்களை வகுத்து விளையாடுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இம்முறை உலக கிண்ணத்துக்கு சென்ற குழாமை நாம் பார்த்தால் சிறந்த வீரர்களே இம்முறை பங்குபற்றவுள்ளார்கள்” என்று அவர் குறிப்பிட்டு இருநதார்.

உண்மையாகவே நாடு பொருளாதார சிக்கலில் முகம் கொடுத்திருக்கும் தருணத்தில் நம் மனதுக்கு எல்லாம் ஒரு மன அமைதியும் ஒரு சந்தோஷத்தையும் தருவது நமது கிரிக்கெட் தான். எனவே இன்று ஆரம்பமானவுள்ள உலகக்கிண்ண தொடருக்கும் நமது பூரண ஆதரவை கொடுப்போம் இலங்கை ரசிகர்களாக !

சங்காவின்; வார்த்தைகள் மெய்யப்பட வேண்டும் என்பது இலங்கை கிரிக்கெட் மீது அதீத அன்பு கொண்ட ஒவ்வொரு ரசிகனினும் ஆசை !

விஸ்வநாதன் அபிவிதுஷன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15