அமைச்சர்களுக்கு காணப்படும் அறிவு மட்ட இந்தளவெனில் சாதாரண மக்களின் புரிதல் எவ்வாறிருக்கும் - அமைச்சர் அலி சப்ரி

Published By: Digital Desk 5

15 Oct, 2022 | 10:48 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வந்த பொருளாதார நிலைமை தொடர்பில் கடந்த அமைச்சரவையின் அமைச்சர்கள் கூட அறிந்திருக்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது.

பொருளாதாரம் தொடர்பில் அமைச்சர்களுக்கு காணப்படும் அறிவு இந்த மட்டத்தில் உள்ளதெனில் , சாதாரண மக்களின் புரிதல் எவ்வாறிருக்கும் என்று சிந்திக்க வேண்டியேற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான அரசாங்கத்தின் பொறுப்பு மற்றும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் மோசமான நிலைமையை முந்தைய அமைச்சரவை கூட முழுமையாக அறிந்திருக்கவில்லை.

பொருளாதாரம் நாட்டின் இதயம் என்பதை அரசாங்கம் கற்றுக்கொண்டது. எனவே பொருளாதாரம் தோல்வியடைந்தால் ஏனைய அனைத்தும் தோல்வியடையும்.

துரதிஷ்டவசமாக, கடந்த அமைச்சரவையின் அமைச்சர்கள் கூட வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார நிலைமையை சரியாக அறிந்திருக்கவில்லை.

நான் உட்பட அந்தந்த அமைச்சர்கள் அவரவர் துறைகளில் மாத்திரமே அவதானம் செலுத்தினர். சட்ட சீர்திருத்தம், டிஜிட்டல் மயமாக்கல், மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு தொடர்பான புதிய திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் , நாட்டின் ஆழமான பொருளாதார பிரச்சனைகள் பற்றி உணரவில்லை.

நாட்டின் அமைச்சரவைக்கே பொருளாதாரம் குறித்த அறிவு குiவாகக் காணப்பட்டால் , சாதாரண மக்களின் புரிதல் எந்தளவில் காணப்படும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

வரிவிதிப்பு இல்லாமல் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. 1981 களில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீத வரி அறவிடப்பட்டது.

ஆனால் இன்று அது 8.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இலவசக் கல்விக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் , இலவசக் கல்வியைப் பெற்ற 6,500 வைத்தியர்கள் தேசிய சுகாதார சேவையில் கடமையாற்றுகின்றனர். அவர்கள் நாட்டிற்கு எவ்வளவு வரி செலுத்தினார்கள்? அதை நாம் பார்க்க வேண்டும்.

நாம் அரசியல்வாதிகளின் தவறுகளை மட்டுமே காண்கிறோம். எவ்வாறிருப்பினும் அரசியல்வாதிகள் மாத்திரமின்றி அனைவருடனும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56