- ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக அதிகமாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு அடியிலிருந்து இரண்டரை அடி நீளமான முக்குலியான் எனப்படும் பாம்புகளே இவ்வாறு காணப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். 

இந்த பாம்புகள் இறந்த நிலையிலும் கரையொதுங்கி வருகின்றன.

இந்த பாம்புகளினால் மீன் பிடிப்பதற்கு சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக மீன் பிடி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் றுக்ஸான் குறூசிடம் வினவியபோது, காலநிலை மாற்றத்தினால் மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த பாம்புகள் வருகின்றன. இது தொடர்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.