முச்சக்கரவண்டிகளுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரிக்கப்படும் - வலுசக்தி அமைச்சர் காஞ்சன

By Digital Desk 5

15 Oct, 2022 | 10:39 PM
image

(எம்.மனோசித்ரா)

சுத்தீகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக எரிபொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றை இறக்குமதி செய்து அவற்றை தடையின்றி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும் வாடகை முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து , எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வலுசக்தி அமைச்சில் சனிக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சுத்தீகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக எரிபொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போதுள்ள கப்பலிலிருந்து மசகு எண்ணெண்யைப் பெற்றுக் கொண்ட பின்னரும் , சிறு காலம் சுத்தீகரிப்பினை ஆரம்பிப்பதற்காக காத்திருக்க வேண்டும்.

காரணம் ஒரு கப்பலுள்ள எண்ணெண்யை மாத்திரம் கொண்டு சுத்தீகரிப்பினை ஆரம்பிக்க முடியாது. எனவே அடுத்த கப்பல் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதற்காக விலைமனு கோரல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதற்கு எவரும் முன்வராத போதிலும் , தற்போது முன்வந்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் கொடுப்பனவுகளை செலுத்தக் கூடிய இயலுமை அடிப்படையிலேயே இந்த விலைமனு கோரல்களும் வழங்கப்படவுள்ளன.

விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றை இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டுள்ளது.

விமான எரிபொருள் இறக்குமதியை ஒரே முறைமையின் கீழ் முன்னெடுப்பதற்கு இரு நிறுவனங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனினும் இதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதற்காக முதலீடு செய்யப்போவதில்லை. அந்த நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்யும். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அவை விநியோகிக்கப்படும்.

தற்போது விமான நிலைய எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. ஆனால் மண்ணெண்ணெய்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் மீனவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே மண்ணெண்ணெய்யை இறக்குமதி செய்து , எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தட்டுப்பாடின்றி இவை இரண்டையும் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எரிபொருள் விநியோகம் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் , மேலும் பல புதிய நிறுவனங்கள் நாட்டில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளன.

விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதியை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும். இந்த முறைமையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி , ஏனையோருக்கும் விமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பளிக்கப்படும். இது குறித்த சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சியும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தற்போது சகல விதமான வாகனங்களுக்குமான எரிபொருள் விநியோகம் 60 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதனால் முச்சக்கரவண்டி சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வழங்கும் எரிபொருளின் அளவை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய வாடகை முச்சக்கர வண்டிகளை வைத்திருப்பவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருட்களின் அளவு அதிகரிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக...

2023-02-02 12:49:22
news-image

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ?...

2023-02-02 15:25:08
news-image

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

2023-02-02 15:42:37
news-image

காணாமல்போன வெல்லம்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் நிர்வாணத்துடன்...

2023-02-02 17:03:36
news-image

26 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்...

2023-02-02 16:23:13
news-image

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி...

2023-02-02 16:59:48
news-image

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில்...

2023-02-02 16:57:03
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-02-02 15:34:04
news-image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

2023-02-02 16:53:42
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை...

2023-02-02 15:56:36
news-image

கடவுளிடமே மன்னிப்புக் கோரினேன்; கத்தோலிக்க தேவாலயத்திடம்...

2023-02-02 15:45:01
news-image

மட்டக்களப்பு நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பியோட்டம்

2023-02-02 16:12:51