கிரிக்கட் ஜாம்பவானும் புகழ்பெற்ற மனித நேய செயற்பாட்டாளருமான ரொஷான் மஹாநாம, தேசத்தின் பின்தங்கிய சிறுவர்களின் வாழ்க்கைக்கு வளமூட்டும் நோக்கில் “ரொஷான் மஹாநாம நம்பிக்கை நிதியத்தை அண்மையில் நிறுவியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தில் தம்மைப் பதிவு செய்துள்ள இந்த நிதியத்தின் உத்தியோகபூர்வ அறிமுகம் 2022 ஒக்டோபர் 4ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு, ‘Spreading Humanity Beyond Boundaries’ எனும் தலைப்பிடப்பட்டிருந்தது.
ரொஷான் மஹாநாமவினால் வழங்கப்பட்ட உறுதியான, “We Promise” எனும் நிதியத்தின் தொன்பொருளுக்கமைய, வறுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வியை நிலையாகத் தொடர்வதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும், பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கும் மற்றும் தமது எதிர்காலத்தை கட்டமைத்துக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் பெருமளவு கவனம் செலுத்தப்படும்.
இந்த அறிமுக நிகழ்வில் நிதியத்தின் தவிசாளர் ரொஷான் மஹாநாம கருத்துத் தெரிவிக்கையில், “பல்வேறு சமூக நலன்புரி மற்றும் தன்னார்வ செயற்பாடுகளில் பல தசாப்த காலமாக ஈடுபட்டுள்ளவர் எனும் வகையில், தேவைகளைக் கொண்ட சிறுவர்களின் நலனுக்காக என்னாலான இயன்ற பங்களிப்பை வழங்க ஒருபோதும் நான் தவறியதில்லை.
இன்றைய சிறுவர்கள், நாளைய குடிமக்களாக திகழ்வர். சிறந்த கல்வியுடன், முறையான பாடசாலை வாழ்க்கை போன்றன மனித சிந்தனைகளைக் கொண்ட குடிமக்களை கட்டியெழுப்ப உதவியாக அமைந்துள்ளன.
இந்த புதிய பயணத்தில் நான் காலடி பதிக்கையில், சமூகத்துக்கு மீள வழங்குவது மற்றும் எதிர்காலத்துக்கு சிறந்த இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றில் அனைவரையும் ஊக்குவிக்க நான் எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.
நேர்மை, வெளிப்படைத்தன்மை, ஒழுக்கம், பற்றுறுதி மற்றும் நட்பு போன்ற பெறுமதிகளுக்கமைய, ரொஷான் மஹாநாம நம்பிக்கை நிதியம் என்பது பல பிரதான அரண்களினால் வழிநடத்தப்படுகின்றது.
இவற்றில், புலமைப்பரிசில்களினூடாக கல்வியை மேம்படுத்தல், கல்வி விருத்தித் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு, பல்வேறு கல்விசார் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது மற்றும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை மேம்படுத்துவது, தேவையுடைய சிறுவர்களுக்கு உதவுவது மற்றும் பாரதூரமான நோய்கள் தவிர்ப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட அல்லது இயற்கை அனர்த்தங்களின் போது அடிப்படை அத்தியாவசிய பொருட்களை வழங்குது, வறுமை, மாற்றுத்திறன், இனம், மதம், பாலினம் போன்ற சகல மக்களுக்கும் உள்ளடகத்தன்மையை ஊக்குவிப்பது மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாமல் செய்தல் போன்றன அடங்கியுள்ளன.
ரொஷான் மஹாநாம நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் ஷிரோமி மசகோரல கருத்துத் தெரிவிக்கையில்,
“ஏனையவர்களுக்கு வழங்குவதில், ரொஷான் நேர்த்தியான முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன், பல வருட காலமாக சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவிகளை வழங்கி வரும் நிலையில், முதன் முறையாக இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கட் நட்சத்திரமும், விளையாட்டு வீரர் ஒருவரினால் தமது சொந்த பொதுநல நம்பிக்கை நிதியமொன்று நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிதியத்தில் பங்கேற்பதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்வதுடன், இதில் தொடர்ந்து செயலாற்றுவதற்கு என்னை அர்ப்பணித்துள்ளேன்.
தேசத்தை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு எமது சிறுவர்களை ஊக்குவிப்பதில் பங்களிப்பு வழங்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.” என்றார்.
“கல்வி மற்றும் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் நலன், பாதுகாப்பான சூழல்” போன்ற கைகோர்ப்புகளை நிதியம் இனங்கண்டுள்ளது.
நிலைபேறான மாற்றத்தை எய்துவதற்கு பரந்தளவு பங்காளர்களுடன் பங்காண்மைகளை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றது. ஹேமாஸ் அவுட்ரீச் மையம் முன்னெடுக்கும் பியவர முன்பள்ளி, SOS சிறுவர் கிராமங்கள், ரொஷான் விஜேராம குடும்ப நம்பிக்கை நிதியம், இந்திரா புற்றுநோய் நிதியம், சுவ அரண, சமூக உணவு பகிர்வு நிதியம், AYATI, குழந்தை நல மருத்துவ கல்வியகத்தின் நிகழ்ச்சித் திட்டங்களான – குழந்தைக்கு உணவளிப்பது, லமா பியச போன்றவற்றுடன் இந்நிதியம் இணைந்து செயலாற்றும்.
நிதியத்தின் இலச்சினையை அறிமுகம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது. கிரிக்கட் எல்லைகளுக்கு அப்பால் சென்று, உலகை அழகிய வாழிடமாக மாற்றுவதற்கு அவசியமான பெறுமதிகளையும், அன்பையும் பகிர்ந்து இயங்கும் வகையில் வழிகாட்டுவதற்காகவும், உதவிகளை வழங்குவதாகவும் இந்த நிதியத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.
ரொஷான் மஹாநாம நம்பிக்கை நிதியத்தின் காப்பாளர்கள்
இடமிருந்து அமர்ந்திருப்போர்: ஜீவா மஹாநாம, ரேணுகா சேனாதீர
இடமிருந்து பின்வரிசை: மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, ரொஷான் மஹாநாம (தவிசாளர்), அஷான் பீரிஸ்
ரொஷான் மஹாநாம நம்பிக்கை நிதியத்தின் காப்பாளர்களும் செயற்பாடுகளுக்கான பணிப்பாளரும்
இடமிருந்து அமர்ந்திருப்போர்: ஜீவா மஹாநாம, ரொஷான் மஹாநாம (தவிசாளர்)
இடமிருந்து பின்வரிசை: மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, ஷிரோமி மசகோரல (செயற்பாடுகள் பணிப்பாளர்), ரேணுகா சேனாதீர, அஷான் பீரிஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM