ஆற்றில் நண்பர்களுடன் நீராடி களியாட்டத்திற்குச் சென்றவர் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 5

15 Oct, 2022 | 12:03 PM
image

(கனகராசா சரவணன்)

திருக்கோலில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முனைக்காடு பெரியகளப்பு ஆற்றில் நண்பர்களுடன் சென்று நீராடி களியாட்டத்தில் ஈடுபட்டபோது அங்கிருந்து காணாமல் போன ஆண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (14) பகல் அந்தபகுதி ஆற்றில் நீரிழ் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் முனை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய விநாயகமூர்த்தி விஜயராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். 

தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட நண்பர்கள் சம்பவதினமான வியாழக்கிழமை (13)  முனைக்காடு  ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு உணவு சமைத்து சாப்பிட்டு மது அருந்தி ஆற்றில் நீராடி களியாட்த்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சடலமாக மீட்கப்பட்டவர் அருகில் சென்று வெற்றிலை போட்டுவிட்டு வருவதாக சென்றவா நீண்ட நேரமாகியும் தீரம்பி வராத நிலையில் அவரை அங்கு தேடிய நிலையில் அவரை காணாததையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பகல் காணாமல் போனவர் ஆற்றில் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நீரில் மிதப்பதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21