தொடரும் சீரற்ற காலநிலை : 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

Published By: Digital Desk 5

15 Oct, 2022 | 09:30 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றைய தினம் கேகாலை மாவட்டத்தில் வரகாப்பொல - தும்பலியத்த பிரதேசத்தில் மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதோடு, மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த வீட்டில் நால்வர் இருந்துள்ளதோடு, அவர்களில் 50 வயதுடைய நபரொருவர் மாத்திரம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரையும் தேடும் பணிகள் (நேற்று மாலை) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட - மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதற்கமைய, அதிகூடிய மழைவீழ்ச்சியாக 194.50 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி களுத்துறை - ஹொரணையில் பதிவாகியுள்ளது.

இதனை தவிர இங்கிரிய, ஹல்வத்துர, அரகாவில, ஹெகொட, தெய்வேந்திரமுனை, நுவரெலியா- களுகல மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் மழையினால் நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பொல்கொல்ல மகாவலி அணையின் வான்கதவுகள் மூன்று அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. 

இதனைக் கருத்திற்கொண்டு பொல்கொல்ல மகாவலி அணையின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு பொல்கொல்ல மகாவலி அணையின் பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதே வேளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41