'எனது அப்பா ஒரு குற்றமும் செய்யவில்லை. அவரை ஒன்றும் செய்ய வேண்டாம். அவரை பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது. ஜனாதிபதி மாமா உடனே எனது அப்பாவை விடுதலை செய்யுங்கள்' என சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மகளான கஜிதா என்ற சிறுமி தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினால்; கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே குறித்த சிறுமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.