(ஜேஜி. ஸ்டீபன்)
ஏறக்குறைய ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தோடு தொடர்பு கொண்டுள்ள சோழர் காலத்து வரலாற்றை 1955இல் நூலுருவாக்கம் செய்தவர், இந்தியாவின் சுதந்திரப் போராளியும் இலக்கியவாதியுமான கிருஷ்ணமூர்த்தி என்கிற கல்கி ஆவார்.
கல்கியின் நெடுந்தொடரான 'பொன்னியின் செல்வன்' மணிரத்னம் என்ற இயக்குநரால் திரைக்காவியமாய் உயிர் பெற்றிருக்கிறது.
இலக்கியவாதி கல்கியின் நூலுருவம் பெற்றுள்ள பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவியத்தில் பங்கேற்றுள்ள நடிகர்களான பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், நடிகைகளான ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சோழர்களாகவே வாழ்ந்து காட்டி இருக்கின்றனர் என்றே கூற வேண்டும்.
சோழர் காலத்து வரலாற்றை நூலுருவாக்கம் செய்த கல்கியை தமிழ் உலகம் எவ்வாறு மறவாதிருக்கிறதோ அதேபோன்றே இயக்குநர் மணிரத்னத்தின் பெயரும் வரலாற்றில் மறவாதிருக்கும் என்பது திண்ணமாகும்.
கல்கியின் தேடல்களில் சோழர் காலத்து வரலாறு எந்தளவு திருப்தியளிக்கிறது என்பது ஒருபுறமிருக்க, அதே நூல் ஒரு திரைக்காவியமானபோதும், அதில் பொன்னியின் செல்வன் என்ற முழு வரலாற்றையும் சுவைத்துவிட முடியாது என்பதும் புரிதலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
மணிரத்னம் என்கிற நபர் ஒரு வரலாற்றை நயம் மாறாது திரைக்காவியமாய் ஆக்கியுள்ளார். அதில் வியாபார நோக்கு அலைபாய்ந்திருப்பது தவிர்க்க முடியாதது என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த திரைக் காவியத்தின் கெமரா தொழில்நுட்ப கலைஞரின் புலமையானது புகழ்ச்சிக்குரியது என்பதையும் கூறி வைக்க வேண்டும்.
இத்தகையதொரு வரலாற்றுப் புகழை பறைசாற்றி நிற்கும் 'பொன்னியின் செல்வன்' திரைக்காவியமானது சோழர் காலத்தோடு தொடர்புபட்ட நமது தேசமான இலங்காபுரியிலும் திரையிடப்பட்டமை, அந்த வரலாற்றை இன்றைய நம் நாட்டுச் சிறுவர்களும் அறிந்து புரிந்துகொள்ளும் வகையில் விதைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு இலங்கையரின் அன்பையும் ஆதரவையும் மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுக்கும் வகையில்தான் தமிழர் பண்போடு அத்திரைப்படம் இலங்கையில் வரவேற்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் விவேகா பயிற்சி நிறுவனத்தின் ஸ்தாபகர் கே.டி. குருசாமி, அந்நிறுவனத்தின் தலைவர் பழ. புஷ்பநாதன் ஆகியோரின் தலைமையில் கடந்த முதலாம் திகதி வெள்ளவத்தை சவோய் திரையரங்கில் முற்பகல் 10 மணிக்கு 'பொன்னியின் செல்வன்' திரைக் காவியத்துக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வை கம்பவாரிதி இ. ஜெயராஜ் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, வீரகேசரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம். செந்தில்நாதன், மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் சிவலிங்கம் சதீஷ்குமார், வர்த்தகப் பிரமுகர்களான ஆர். மகேஸ்வரன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரும் பங்கேற்று மங்கள விளக்கை ஏற்றிவைத்து நிகழ்வுக்கு வலுசேர்த்தனர்.
பொன்னியின் செல்வன் என்ற திரைக்காவியத்தை திரைக்காவியமாகவே பார்க்க வேண்டும் என்று கூறினாலும், நமது தேசத்தோடு தொடர்புபட்டிருக்கின்ற காரணத்தால் வரலாறுகள் திரிபு பெற்றுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், நம் நாட்டின் தேசியக்கொடி மிகுந்த கௌரவத்துக்குரியதாகும். எனினும், நம் நாட்டின் தேசியக்கொடி கடற்கரையில் கிடப்பது போன்றதொரு காட்சி வருகிறது.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேசியக் கொடியானது சமகாலத்து தேசியக்கொடியே தவிர அது சோழர் காலத்தின் இலங்கை தேசியக் கொடியாக இருக்க முடியாது. அந்த இடத்தில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
மேலும், தேரர்கள் எழுந்து நின்று கை கூப்பி வணங்குவது போன்றதொரு காட்சியும் படமாக்கப்பட்டிருக்கிறது. இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதாலும் பௌத்தம் மிகச் சரியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதாலும் மேற்படி காட்சி திரிசங்கு நிலையை ஏற்படுத்தி இருப்பதாக ஒரு பார்வை உள்ளது.
இத்திரைக் காவியத்தில் வருகின்ற காட்சிகள் அனைத்தும் கல்கியின் நூலை தழுவியிருப்பதால் கல்கி இவ்விடயத்தில் எந்தளவு ஆழமாக பார்த்திருந்தார் என்பதும், அதேவேளை இயக்குநர் மணிரத்னத்தின் ஒப்புநோக்கலில் தொய்வு ஏற்பட்டிருக்கிறதா என்பதுமான கேள்வியும் உண்டு.
எது எப்படி இருந்தபோதிலும், உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த இயக்குநர் மணிரத்னம் தற்போது இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடத்தில் வரலாற்று தேடல்களுக்கு வித்திட்டிருக்கிறார் என்று கூறுவது மிகையாகாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM