சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டவருக்கு அச்சுறுத்தல்

Published By: Vishnu

14 Oct, 2022 | 03:26 PM
image

கரைச்சி நிருபர்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து அவர்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி தர்மராசா என்பவரே சட்டவிரோத மணல் அகழ்வோரால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு  எதிராக இம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 10 வருடங்களாக விவசாயிகளையும், விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகின்ற இரணைமடு குளத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்ற வகையில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றவர்கள் தொடர்பில் அதிகாரிகள், பொலிஸார், இராணுவம்,  ஆகியர தரப்பினர்களுக்கு தகவல்களை வழங்கியும், ஊடகங்கள்  ஊடாக  தகவல்களை வெளிக்கொண்டும் வந்தும் இதுவரை சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை மாறாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் தொடர்ச்சியாக இச் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருவதோடு, அதற்கு எதிராக செயற்படுகின்றவர்களை தாக்கியும் அச்சுறுத்தல் விடுத்தும் வருகின்றனர்.

என்னுடன் சேர்ந்து இச் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வந்த நெருங்கிய உறவினரான இளைஞர் ஒருவனும் இவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளான்.

அதுமாத்திரமன்றி குழுவாக வந்து வீடுகளுக்குள் வெடிகளை கொளுத்தி போடுதல், எச்சரிக்கை விடுதல் என்பன தொடர்ந்துகொண்டு இருக்கிறது. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் அவர்களது நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக இல்லை. எனவேதான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04