யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் (14) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிசாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிசார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர்.
இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 6மணி முதல் யாழ் மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM