தாய்லாந்து தூதரக கட்டிடம் “Siam Nivasa” என கலாச்சார மையமாக மாற்றம்

By Vishnu

14 Oct, 2022 | 12:57 PM
image

கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகாமையில் முன்பு இயங்கி வந்த தாய்லாந்து தூதரக கட்டிடம், தற்போது “siam nivasa” எனப்படும் பன்முக செயல்பாட்டு கலாச்சார மையமாக தாய்லாந்து தூதரகத்தால் மாற்றப்பட்டுள்ளது. 

Siam Nivasa - அல்லது தாய்லாந்து மொழியில் ‘Siam Nivas’ என்றால் தாய்லாந்து மக்களின் இல்லம் என்று பொருள்படும்: Nivas என்ற சமஸ்கிருத வழித்தோன்றல் வார்த்தையின் பொருள் இல்லம், வீடு, குடியிருப்பு மற்றும் Siam என்பது தாய் அல்லது தாய்லாந்தின் புராதன நாமம். தாய்லாந்து அரசு இந்த கட்டிடத்தையும் நிலத்தையும் 1980 களில் வாங்கி, அதை தனது தூதரகமாக பயன்படுத்தி வந்தது. 

பின்னர், அரசியல் சூழ்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால், தூதரகமானது விஜேராமவில் உள்ள கிரீன் லங்கா கட்டிடம், பின்னர் கொழும்பு மாநகர சபை முதல்வரான ரோசி அம்மையாரின் வாசஸ்தலத்திற்கு அடுத்து, சேர் மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள தற்போதைய இடம் என பலமுறை இடம் மாற்றப்பட்டது. 

இப்போது தூதரகம் கட்டிடத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு, பிணைப்பு மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் இப்புதிய இட வசதி ஒரு கலாச்சார மையமாகவும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கான இடமாகவும் செயல்படும்.

Siam Nivasa திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் 2022 செப்டெம்பர் 26 அன்று விசேட அங்குரார்ப்பண நிகழ்வொன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் Hoon-Kra-Bork அல்லது பாரம்பரிய தாய்லாந்து பொம்மலாட்டம் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சி, அதனைத் தொடர்ந்து தாய்லாந்து பொம்மலாட்டக் கலை தொடர்பான செலயமர்வு ஆகியவை அடங்கியிருந்தன. 

மேலும், இந்நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கு செயலமர்வு நிறைவுற்ற பின்னர் தாய்லாந்து பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை சுவைத்து, அனுபவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான தாய்லாந்து தூதுவரான மாண்புமிகு போஜ் ஹர்ன்போல் அவர்கள் கூறுகையில், “பல நூற்றாண்டுகளாகத் தொடரும் பௌத்த உறவுகளுக்கு மேலதிகமாக, 1955 ஆம் ஆண்டு முதல் இலங்கையுடன் தலைசிறந்த பிணைப்புடனான இராஜதந்திர உறவுகளைப் பேணி வரும் தாய்லாந்து இராச்சியம், புதிய Siam Nivasa பன்முக செயல்பாட்டு கலாசார மையத்தை திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறது. 

இலங்கையில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தாய்லாந்து பிரஜைகள் பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வு ஏற்பாட்டு இடத்தை வழங்கும் அதே வேளையில், எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைக் கொண்டாடுவதற்கு ஒரு பிரத்தியேக இடத்தை ஏற்பாடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம். 

இந்த சாதனை இலக்கினை தமது மதிப்புமிக்க மற்றும் கௌரவமான வருகையுடன் சிறப்பிக்கும் வகையில், அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், குறிப்பாக ஆசியான் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் தூதரகத் தலைவர்களுக்கு தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தாய்லாந்து கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்பி வருவதால், இலங்கை மற்றும் நமது மற்ற இராஜதந்திர பங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

தாய்லாந்து தூதரகத்தின் Siam Nivasa பன்முக செயல்பாட்டு கலாசார நிலையத்தின் அங்குரார்ப்பண விழா நிகழ்வில் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் உட்பட பல இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையிலும், தாய்லாந்து-இலங்கை நட்புறவை வெளிப்படுத்தும் வகையிலும், Hoon- Kra-Bork தாய்லாந்து பொம்மலாட்டம் மற்றும் தாய்லாந்து சிறப்பு இசை நிகழ்வு செப்டெம்பர் 27 ஆம் திகதியன்று கொழும்பு நகர மண்டபத்திலுள்ள கொழும்பு மாநகர சபையில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தின் புதிய நிகழ்வு அரங்கத்தில் கொழும்பு மாநகர சபை முதல்வரான மாண்புமிகு ரோசி சேனாநாயக்க அவர்களின் பிரசன்னத்துடன் நடத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Daraz ஊடாக கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்

2023-02-04 10:41:45
news-image

OPPO A Series அணிவகுப்பின் புதிய...

2023-02-03 10:59:13
news-image

SLIM Brand Excellence Awards 2022இல்...

2023-02-02 15:16:00
news-image

உதய சூரியனைப்போல் நம்பிக்கையுடைய சனிதா உருவாக்கிய...

2023-02-01 16:08:17
news-image

கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல்...

2023-01-31 15:05:30
news-image

வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன்...

2023-01-27 15:36:26
news-image

40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய...

2023-01-26 10:52:26
news-image

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...

2023-01-11 14:45:57
news-image

'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய...

2023-01-06 12:31:42
news-image

மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று...

2023-01-01 12:15:59
news-image

பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள...

2022-12-23 15:08:59
news-image

DFCC வங்கி GoodLife X உடன்...

2022-12-22 15:59:53