காம்பியாவில் குழந்தைகள் இறப்பு : விசாரணைகளை ஆரம்பித்தது இந்தியா

By Vishnu

14 Oct, 2022 | 12:38 PM
image

காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்தமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் உள்ளடங்கிய 'பாதகமான நிகழ்வு' என்ற அறிக்கையினை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை இந்தியா நியமித்துள்ளது.

இதனை தொடர்ந்து மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்டின் சோனிபட் யூனிட்டில் மருந்து உற்பத்தியை நிறுத்த ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சமீபத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட 'பல முரண்பாடுகளை' ஒரு வாரத்திற்குள் விளக்க வேண்டும் அல்லது உரிமத்தை இடைநீக்கம் அல்லது ரத்து செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் இருமல் மருந்துகளை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்கள் ஒய்.கே.குப்தா, துணைத் தலைவர், மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழுவில் புனேவைச் சேர்ந்த பிரக்யா டி யாதவ், ஆர்டி பாஹ்ல், தொற்றுநோயியல் பிரிவு, மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பைச் சேர்ந்த கே பிரதான் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகத்திற்குரிய மருந்துகளில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதாக ஐநா அமைப்பு கூறியுள்ளது.

டீஎத்திலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மனிதர்களுக்கு நச்சுத்தன்மையுடையவையாகும். இதனால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மாற்றப்பட்ட மனநிலை மற்றும் கடுமையான சிறுநீரக பாதிப்பு ஆகியவை மரணத்திற்கு வழிவகுக்கும்.

செப்டம்பர் 29 திகதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு இந்தப் காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது. அதைக் கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளருடன் இணைந்து இந்த விவகாரத்தில் உண்மை விவரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொங் கொங்குக்கு வருபவர்களுக்காக 5 இலட்சம்...

2023-02-02 17:31:15
news-image

பாலியல் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க...

2023-02-02 17:27:46
news-image

அதானி குழும விவகாரம் | நாடாளுமன்றக்...

2023-02-02 16:13:37
news-image

அமெரிக்கா- தென் கொரியா கூட்டு வான்வழி...

2023-02-02 11:50:26
news-image

ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும்...

2023-02-02 11:16:48
news-image

இந்தோ - எகிப்து கூட்டுப் பயிற்சியின்...

2023-02-02 12:48:00
news-image

ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் சீர்திருத்தத்திற்கான அவசியத்தை...

2023-02-02 10:58:18
news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27