முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் : கணக்காய்வாளர் நாயகம் ஊடாக சிறப்பு விசாரணை ஆரம்பம்

Published By: Digital Desk 5

14 Oct, 2022 | 10:23 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில்  சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டப்ளியூ.பி.சி. விக்ரமரத்ன  தெரிவித்தார்.

பிரதி கணக்காய்வாளர் ஒருவரின் கீழ் கணக்காய்வாளர்கள் குழாம் ஒன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2022 ஜூலை 4 ஆம் திகதியிடப்பட்டதாக ' இலங்கையின்  நிதி முகாமைத்துவம் மற்றும் பொதுக் கடன் கட்டுப்பாடு தொடர்பிலான சிறப்பு கணக்காய்வு அறிக்கை 2018 - 2022 ' எனும் தலைப்பின் கீழ் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் கணக்காய்வாளர் நாயத்துக்கு கடந்த 7 ஆம் திகதி உத்தரவிட்டது.

அ.  அமரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 203 ரூபாவாக பேண நாணயச் சபை எடுத்த தீர்மானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும்.

ஆ.  சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள ஏற்பட்ட கால தாமதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள்

இ. கடந்த 2022  ஜனவரி 18 ஆம் திகதி முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட சர்வதேச பிணை முறி பத்திரங்கள் தொடர்பில்  500 மில்லியன் அமரிக்க டொலர்களை செலுத்தியமை மற்றும் அது சார்ந்த விடயங்கள்

ஈ.  மேற்சொன்ன நடவடிக்கைகள் மற்றும் செலுத்துகைகளால் மத்திய வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பிலான கணக்காய்வு  அறிக்கை

ஆகியவற்றை மையபப்டுத்தி அந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவசியம் என  உயர் நீதிமன்ரம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02