( எம்.எப்.எம்.பஸீர்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்க கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சராக பதவியேற்றதும், நிமல் சிறிபால டி சில்வா கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்த நிலையில், அதற்கு எதிராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பிலேயே இவ்வறிவித்தல் பிறப்பிக்கப்ப்ட்டுள்ளது.
கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாலர் லசந்த அழகியவண்ண உள்ளிட்ட நால்வரை பிரதிவாதிகளாக பெயரிட்டு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி அவ்வழக்கை ஆராய்ந்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம, மனுதாரர் கோரிய பிரகாரம், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அவர் வகித்த பதவிகளில் இருந்து அவரை நீக்கவோ, இடை நிறுத்தவோ தடை விதித்து இடைக்கால தடை உத்தரவொன்றினை கடந்த ஜூன் 20 ஆம் திகதி பிறப்பித்தார்.
அதன்படி, நிமல் சிறிபால டி சில்வாவை மத்திய செயற் குழுவில் இருந்தும், நிறைவேற்றுக் குழுவிலிருந்தும், மாவட்ட தலைவர் பதவியிலிருந்தும், தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்குவது மற்றும் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கும் அது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்கும் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றினைப் பெற்றுக்கொண்டதை மையப்படுத்தி, மனுவின் பிரதிவாதிகள் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தன்னை கட்சி பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவித்ததாக மனுதாரரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஊடக அறிக்கை வெளியிட்ட பின்னர் மத்திய செயற்குழு கூடியதாகவோ அல்லது அதில் ஏதும் தீர்மனங்கள் எடுக்கப்பட்டதாகவோ தனக்கு தெரியாது என நிமல் சிறிபால டி சில்வா மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தன்னை கட்சிப் பதவிகளில் இருந்து இடை நிறுத்துவதாக ஊடக அறிக்கை வெளியிட முன்னர், தன் பக்க நியாயங்களை கூற தனக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை எனவும் இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே இம்மனு தொடர்பில் விளக்கமளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM