இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுங்கள் - கஜேந்திரன் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

13 Oct, 2022 | 09:03 PM
image

(நா.தனுஜா)

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பன தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான முனைப்பைக் காண்பிக்காத நிலையில், இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகயை முன்னெடுக்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் பின்லாந்து வெளிவிவகார அமைச்சர் பெக்கா காவிஸ்தோவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா காவிஸ்தோ, பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர், அந்நாட்டின் ஆசிய மற்றும் அமெரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் மற்றும் அந்நாட்டின் மனித உரிமைசார் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

அதன்படி பின்லாந்து வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கையில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு 13 வருடங்களும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 10 வருடங்களும் கடந்துள்ள நிலையில் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய கஜேந்திரன் எம்.பி, உள்ளகப்பொறிமுறையின் மூலம் ஒருபோதும் நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்றும், எனவே இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பன தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கங்கள் ஆக்கபூர்வமான முனைப்பைக் காண்பிக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பின்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழித்தல், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலைசெய்தல், வடக்கில் இடம்பெற்றுவரும் தீவிர சிங்களமயமாக்கலை முடிவிற்குக்கொண்டுவரல் ஆகியவற்றை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கைமீது பின்லாந்து அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அதுமாத்திரமன்றி தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் விளைவாக எவ்வித நன்மைகளும் கிட்டாது என்பதால், அதனை ஐ.நா பொதுச்சபையின் ஊடாக முன்னெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17
news-image

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும்...

2025-01-21 19:47:28
news-image

ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும்...

2025-01-21 22:42:17
news-image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் சபையில்...

2025-01-21 22:34:09
news-image

மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு...

2025-01-21 17:47:47
news-image

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின...

2025-01-21 15:51:54
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை...

2025-01-21 17:31:09