கனடா பிரஜையொருவரை தடுப்பு காவலில் வைத்திருக்கும் போது சித்திரவதைக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு குறித்த கனடா பிரஜைக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

குறித்த விடயத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு  உத்தியுாகப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு கனடா பிரிஜையான ரோய் சமாதானம் (46) என்ற நபரை பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர்   விடுதலைப்புலி உறுப்பினர் என கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்தது மாத்திரமின்றி அவர் விடுதலைப்புலியின் உறுப்பினர் என கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரை தடுப்புகாவலில் வைக்கப்பட்டு குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட குறித்த நபர் கனாடா சென்ற பின்னர் இது தொடர்பான முறைப்பாடொன்றை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைத்துள்ளார்.

இதனடிப்படையில் விசாரணை செய்தபோதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.