(இராஜதுரை ஹஷான்)
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தற்போது போசாக்கு குறைபாடு 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி, போசாக்கு தொடர்பில் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் போசாக்கு நிலை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தற்போது போசாக்கு குறைப்பாடு 2 சதவீதத்தால் அதிகரிகரித்துள்ளது.
12 சதவீதமாக காணப்பட்ட போசாக்கு குறைபாடு தற்போது 14 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. போசாக்கு குறைபாடுடனான பிள்ளைகள் தோற்றம் பெற்றால் அவர்கள் எம்மை சபிப்பார்கள்.
ஆகவே சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் பிள்ளைகளின் போசாக்கு மற்றும் கர்ப்பிணி தாய்மாரின் போசாக்கு குறித்து முழுமையான கவனம் செலுத்துவேன்.
பல்வேறு காரணிகளினால் நாட்டில் போசாக்கு குறைபாடு 2 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மந்த போசணையை முழுமையாக இல்லாதொழிப்போம் என குறிப்பிட முடியாது. 14 சதவீத நிலைமையை 10 சதவீதமளவில் நிலைப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM