முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு!

Published By: Digital Desk 3

13 Oct, 2022 | 01:47 PM
image

கே .குமணன் 

கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (13) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அவரின் கீழ்உள்ள கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சரின் இந்த பயணத்திற்காக முல்லைத்தீவு கடற்கரை வீதிகளில் அதிகளவு பொலிஸார் போடப்பட்டுள்ளதுடன் வீதித்தடையினையும் ஏற்படுத்தி பொலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 06.10.22 ஆம் திகதி முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட தொடர்போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது 12 ஆம் திகதி அமைச்சர் நல்ல பதில்கொடுப்பார் என சொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று (12.10.22) கடற்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு பயணம் மேற்கொண்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் 

சுருக்குவலைக்கு ஆதரவான மீனவர்களும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த அமைச்சர்.

தடைசெய்யப்பட்ட தொழிலான சுருக்குவலை இங்கு மாத்திரமல்ல திருகோணமலையிலும் நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதும் செய்கின்றார்கள் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் வடமராட்சி கிழக்கிலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட தொழிலை அமைச்சு ஏற்றுக்கொள்ளவில்லை இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் ஏற்கனவே இரண்டே முக்கால் இஞ்சி கண்ணுக்கு மேற்பட்ட வலைகள் கரையில் இருந்து 10 கடல்மைலிற்கு மேல் செய்யலாம் என்று இருக்கு தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைக்கு விரைவில் நாங்கள் முடிவிற்கு கொண்டுவருவோம் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் அல்ல யாழில்,திருகோணமலையில் இவ்வாறு வேறு பகுதிகளில் நடக்கின்றது இந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்போம்.

மீனவர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார். 

மீனவர்களுக்கான எரிபொருள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செய்கின்றது அதில் சில குறைபாடுகளை பார்க்ககூடிவாறு இருக்கின்றது  நான் தனியார் துறைக்கு இறக்குமதிக்கு அனுமதி கொடுக்கசொல்லி கேட்டிருக்கின்றேன் அனேகமாக அது சரிவரும்என்று நினைக்கின்றேன் 

கொக்கிளாய் கடல் நீர் ஏரியில் வெளியிணைப்பு இயந்திரம் பயன்படுத்தி தொழில் செய்வது தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

களப்பு சம்மந்தமான முகாமைத்துவத்துடன் கலந்துரையாடி வருகின்றோம் விரைவில் இந்த ஆண்டுக்குள் முடிவிற்குள் வரும் நந்திக்கடல் நாயாறு கடல்நீர் ஏரிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல்,நாயாறு கடல் நீர் ஏரிகள் உள்ளிட்ட கரையோரப்பகுதிகளில் உள்ள களப்பு பகுதிகளையும் அதனை அண்டிய குறிப்பிட்ட தூர பகுதியினையும் மீன்பிடி ஒதுக்குப்பகுதியாக அறிவித்து அதற்கு புறம்பாக உள்ள பகுதியினையும் வனஜீவராசிகள் திணைக்கள பகுதியாக அறிவித்து இரண்டு பக்கத்தினையும் உள்ள குழு ஒன்றினை அமைத்து அவர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right