( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23084/22 எனும் தனிப்பட்ட வழக்கின் விசாரணைகளை இடை நிறுத்தும் இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானத்தை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப.9.30 இற்கு பிறப்பிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) அறிவித்தது.
குறித்த கோட்டை நீதிவான் நீதிமன்ற வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சி.ஏ.ரிட் 354/22 எனும் எழுத்தாணை மனு ( ரிட்) மீதான பரிசீலனைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் 303 ஆம் இலக்க விசாரணை அறையில் நிறைவடைந்த நிலையிலேயே நீதிமன்றம் இதனை அறிவித்தது. அதன்படி, இடைக்கால நிவாரணம் மற்றும் குறித்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது குறித்த தீர்மாங்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் வெள்ளியன்று அறிவிக்கும் போது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் நேரில் ஆஜராக வேண்டும் என மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் அறிவித்தனர்.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழு இது தொடர்பில் அறிவித்தது.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கின் சந்தேகநபராக தமது பெயரை குறிப்பிட்டு, எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்து, கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட நீதிவானின் கட்டளையை வலுவிழக்க செய்யுமாறே மைத்திரிபால சிறிசேன மனுவில்கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையில், அது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனு ஒன்றின் பிரதிவாதியாக தாம் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டமை நீதியான விடயம் அல்லவெனவும், இயற்கை நீதிக்கு புறம்பான செயல் எனவும் தெரிவித்து இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக கோட்டை நீதவானும் நீதிமன்ற பதிவாளரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
11 ஆம் திகதி குறித்த ரிட் மனு ஆராயப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரனி உபுல் ஜயசூரிய சிரேஷ்ட சட்டத்தரனி ஜீவந்த ஜயதிலக, சட்டத்தரனிகளான ஹபீல் பாரிஸ், கீர்த்தி திலகரத்ன, அஷான் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதங்கலை முன் வைத்திருந்தார்.
இன்று (12) சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரியவும்
பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவும் வாதங்களை முன் வைத்தனர்.
இந் நிலையிலேயே இந்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்று பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புவதா, கோட்டை நீதிமன்ற வழக்கை இடை நிறுத்தி உத்தரவிடுவதா என்பது தொடர்பிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் வெள்ளிக் கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயமடைந்து, கால் ஒன்றை இழந்த ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அவரது அலட்சியத்தால் குறித்த தாக்குதலில் மரணங்கள் சம்பவித்ததாக மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அம்மனு தொடர்பிலேயே கோட்டை நீதிவான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM