கோடிக்கணக்கான பண மோசடி : திலினியை 4 இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை : 1000 கோடியை தாண்டுமாம்

Published By: Vishnu

12 Oct, 2022 | 07:33 PM
image

!

( எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியை இன்று (12) சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் நான்கு முன்னணி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடாத்தியுள்ளனர். 

கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷேட அனுமதியின் பிரகாரம், சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டு, ஸ்தல விசாரணைகள் நடாத்தப்பட்டதாகவும், பல ஆவணங்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

சி.ஐ.டி.க்கு இந்த மோசடி தொடர்பில் முதல் முறைப்பாட்டை முன் வைத்த அப்துல் சத்தார் என்பவர் முதல் இதுவரை 9 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றின் பிரகாரம் மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 500 கோடி ரூபாவை எட்டியுள்ளதாகவும், இது 1000 கோடி ரூபாவரை செல்லும் என அனுமானிப்பதாகவும்  குறித்த உயரதிகாரி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையிலேயே இன்று (12) சந்தேக நபரான திலினி பிரியமாலி, திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தை நடாத்தி சென்ற கொழும்பு - கோட்டை உலக வர்த்தக மைய கோபுரத்தின் 34 ஆவது மாடியில்  அமைந்துள்ள சொகுசு அலுவலகத்துக்கு  அழைத்து செல்லப்பட்டார். இதன்போது  அவருக்கு கைவிலங்கு எதுவும் இடப்பட்டிருக்கவில்லை.

அங்கு வைத்து குறித்த அலுவலகத்திலிருந்த பல ஆவணங்கள் சி.ஐ.டி. பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இதனைவிட மேல் மாகாணத்தில் அமையப் பெற்றுள்ள மேலும் 3 இடங்களுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், தற்போதும் பாராளுமன்றில் இருக்கும் செல்வாக்கு மிக்க இளம் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பேசப்படும் பெண் ஒருவருக்கும்  திலினிபிரியமாலியின் மோசடிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது குறித்து தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

 குறித்த பெண்ணை சி.ஐ.டி.யினர் விசாரணைச் செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை அவரிடம் முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனைவிட, பல நடிகர்கள், நடிகைகள், கலைஞர்களை விசாரணைக்கு உட்படுத்தவும் சி.ஐ.டி. நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளது.

திலினி பிரியமாலி மோசடி செய்தோர் அல்லது கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்தோர் தொடர்பிலான அனைத்து விபரங்களும் அவரது கையடக்கத் தொலைபேசி ஒன்றிலும்,  கணினி ஒன்றிலும் இருப்பதாக நம்பும்  சி.ஐ.டி.யினர். அவற்றை கைப்பற்றி சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக ஆய்வு செய்து அறிக்கை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணைங்கவின் கட்டுப்பாட்டில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் மேற்பார்வையில் சிறப்பு குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய சந்தேக நபரான திலினி பிரியமாலி எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் மேலதிக வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29