(சசி)

அம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக  நிலத்தை தோண்டியபோது கைக்குண்டு  ஒன்றை மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள கந்தசாமி  கோயில் வீதி புனரமைப்புக்கான திட் டம் தொடர்பான விளம்பரப் பலகையை நாட்டுவதற்க்காக வீதியின் அருகில் தோண்டும் போதே இக் குண்டு மீட்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் இதனை பார்வையிட்டு குண்டை மீட்பதற்கு பொத்துவில் அறுகம்பையில் உள்ள குண்டு மீட் க்கும்  விசேட அதிரடி படையினரை வரவழைத்துள்ளனர்.

இது தொடர்ப்பன மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.