(எம்.ஆர்.எம்.வசீம்)
தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளாமல் தேர்தலை நடத்துவதில் பயனில்லை. அதனால்தான் உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அவ்வாறு இல்லாமல் தேர்தலை பிற்போடுவதற்கு எந்த தேவையும் ஜனாதிபதிக்கு இல்லை.
அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரமானதொரு நிலைக்கு வந்த பின்னர் எந்த தேர்தலை வேண்டுமானாலும் நடத்தலாம்.
அதனால் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கம்பளை நகரசபை தலைவர் சமந்த அருணகுமார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (ஒக் 12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொண்டு அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாகவும், பாராளுமன்றத்தில் அதனை அனுமதித்துக்கொள்ள முடியாவிட்டால், மக்கள் கருத்துக்கணிப்புக்கு செல்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலரும் தெரிவித்திருந்தனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலத்தை வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டிருக்கின்றது.
அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குப் பின்னரே நடத்த முடியும். அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது.
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நாட்டில் இருக்கின்றதா என நாங்கள் கேட்கின்றோம்.
அவ்வாறு தேர்தலை நடத்த தீர்மானித்தாலும், வாக்கு கேட்டு மக்களுக்கு முன் செல்லும் நிலைமை வேட்பாளர்களுக்கு இல்லை.
அதனால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அவரின் இந்த வேலைத்திட்டங்களுக்கு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
அதனால்தான் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்ட பின்னர் எந்த தேர்தலுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குப் பின்னரே நடத்த முடியும்.
அந்த காலப்பகுதிக்கு முன்னர் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமானால், உரிய காலத்தில் எம்மால் தேர்தலுக்கு செல்லலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM