இலங்கை இராணுவம் இன்று உலக அளவில் தனது பெயரை மதித்தக்க மட்டத்தில் வைத்துள்ளது, மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினையும் இராணுவம் பாதுகாக்கும்.  எனவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினை பயன்படுத்திக்கொள்ளதீர்கள் என கடற்படைத்தளபதி வயிஸ் அத்மிரால்  ரவீந்திர சீ விஜேரத்ன தெரிவித்தார்,

அதேநேரம் யுத்தம் நிறைவின் முன்னும் பின்னும் இன்று வரையிலும் கூட இலங்கை இராணுவம் சூழ்ச்சி குறித்தோ  புரட்சி குறித்தோசிந்திக்கவில்லை.  எதிர்காலத்திலும் அதற்கு இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்,

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநியாக இருக்கின்ற ஒருவர் திடீரென இராணுவ புரட்சி ஒன்று தொடர்பில் கருத்து தெரிவித்தமையையிட்டு நாம் பெரும் அதிருப்தியில் உள்ளோம், இராணுவத்திற்கென இந்நாட்டில் வகுக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுவோம்,

இராணுவத்தின் செயற்பாடுகளில் எவ்வாறாக அமைந்துள்ளன என்பது தொடர்பில் மக்கள் பெரிதும் அறிந்திருப்பதில்லை, அதனால் இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிக்கின்ற போது அவதானமாக இருக்க வேண்டும்,

தற்போது இராணுவம் மனதளவில் வீழ்த்தப்பட்டுள்ளது என்ற பிரசாரங்கள் எல்லாம் எழுகின்றன.    ஆனால் அவ்வாறான ஒரு நிலையில் இலங்கை இராணுவம் இல்லை முன்னர் இராணுவத்திற்கு கிடைக்காதிருந்தவற்றையும் தற்போது பெற்றுக்கொண்டுள்ளோம்,  அதனால் இராணுவத்தின் அதிகாரங்களையும் ஏனைய செயற்பாடுகளையும் பலப்படுத்தியும் உள்ளோம், 

இராணுவத்தின் பலம் எந்த வித்திலும் குறையவில்லை . எவராலும் குறைக்கப்படவும் இல்லை. மாறாக முன்பைவிட தற்போது இராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும், 

யுத்தகாலத்தில் இராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கான மீற்றர்களுக்கு அப்பால் சென்ற மிதந்துக்கொண்டிருந்த ஆயுத கப்பல்களை கைப்பற்றி அவற்றுக்கு உரிமை கோரிய தீவிரவாத அமைப்புக்களுக்கும் பதிலடி கொடுத்தனர், இத்தகைய ஆற்றல் உள்ள இராணுவம் மன அளவில் வீழ்ந்துள்ளது என்று கூறினால் அது வேடிக்கையானதாகும்,

அதேபோல் எமது நாடு ஜனநாயக நாடு என்ற வகையில் அதனை உருவாக்கியவர்கள் இந்நாட்டு மக்களாவர்.  எனவே மக்களின் வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை பாதுகாப்பதே இராணுவத்தின் கடமையாகும்.  அதனைதான் இன்றுவரையிலும் இராணுவம் முறையாக சட்டவிதிகளை பின்பற்றி செய்து வருகின்றது,

ஆகவே அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவர் குறிப்பிட்டது போன்று இராணுவ சூழ்ச்சியை மேற்கொள்ளவோ அல்லது புரட்சியை உண்டுபன்னவோ ஒருபோதும் நாம் இடமளிக்கபோவதில்லை.  யுத்தம் நிறைவடைந்த காலத்திலும் அதற்கு முன்னரான காலப்பகுதியிலும் தற்காலத்திலும் நாங்கள் அவ்வாறு சிந்தித்ததில்லை என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. 

எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமை தோற்றம் பெறுவதற்கு இடமில்லை.  எனேவ இன்று உலக நாடுகள் மத்தியில் தனியான மரியாதையை ஈட்டிக்கொண்டுள்ள இலங்கை இராணுவத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான ஒரு கருத்து வெளியானமை தொடர்பில் இராணுவம் அதிருப்பதியடைந்துள்ளது, எனவே அரசியல் கருத்தாடல்களுக்காகவும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் எம்மை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்,

அத்துடன் தற்போது இராணுவம் படிப்படியாக வலுவாகி வருகின்றது.  கப்பல் வழியே பயணித்து தீவுகளில் இறங்கி திட்டம் வகுத்து போராடுவதற்கான புதிய படையணி ஒன்றை உருவாக்கி வருகின்றோம்.  அதற்கான பயிற்சிகள் திருகோணமலையில் வழங்கப்பட்டு வருகின்றன.   அதற்கமைய இராணுவத்தின் அதிகாரங்களும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன,

மேலும் இரண்டு கப்பல் இராணுவத்தின் தேவைகளுக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.  இவை இந்தியாவினால் தயாரிக்கப்படுகின்றன, அடுத்த வருடம் குறித்த கப்பல்களும் இலங்கைக்கு வரவுள்ளன, மேலும் நாம் சகலரும் நாட்டிற்கு கடல் மார்க்கமாக வந்தவர்கள்.  இலங்கையும் ஒரு தீவாகும் எனவே எமக்கு கடலுக்கும் உள்ள தொடர்பானது மிக அதிகமாகும், எதிர்காலத்தில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு எவ்வாறான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருவாய் ஈட்டலாம் என்றும் ஆராய்ந்து வருகின்றோம்,

அதேநேரம் இராணுவத்திடமுள்ள பலமான புலனாய்வு பிரிவின் உதவியோடு கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டுவரப்படும் போதை பொருட்களையும் அதிகமாக கட்டுப்படுத்தியுள்ளோம், அதுபோன்று எவன் கார்ட் நிறுவனமும் இன்று சிக்கல் ஏதும் இன்றி சுமூகமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது, அண்மையிலும் அந்நிறுவனத்தின் பாரிய வருமானத்தினை அரச உடமையாக்க திறைசேரிக்கு அனுப்பி வைத்திருந்தோம் என்றார்,