நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான விசேட விஜயத்தின் போது எரிக்சொல்ஹெய்ம் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் காலநிலை ஆலோசகராக எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எரிக்சொல்ஹெய்முடனான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப்புலிகளிற்கும் இடையிலான மோதல் காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு எரிக்சொல்ஹெய்ம் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ள மகிந்த ராஜபக்ச உள்நாட்டு மோதல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து எரிக்சொல்ஹெய்முடன் ஆராய்ந்துள்ள மகிந்த ராஜபக்ச நோர்வேயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM