லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

Published By: Digital Desk 5

12 Oct, 2022 | 04:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நிட்டம்புவ பிரதேசத்தில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி  ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் செவ்வாக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு-கண்டி பிரதான வீதியின் படலிய பிரதேசத்தில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த லொறி அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர்  வதுப்பிட்டிவல  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 37 வயதுடைய ஒருவர் எனவும் அவர் ரங்பொகுணுகம, நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்நதவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

லொறி  சாரதியின் கவனயீனம் விபத்து காரணம் எனவும் சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

விபத்து தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34