மதுபான விடுதியொன்றில் பணியாற்றிய யுவதியொருவர், தனது கணவனுடன் காதல் தொடர்புகொண்டுள்ளார் என்ற சந்தேகத்தில் அந்த யுவதியை பலர் முன்னிலையில் குத்திய பெண்ணுக்கு பிரித்தானிய நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
47 வயதான லூய்ஸா சான்டோஸ் எனும் இப்பெண்ணுக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வோர்விக்ஷயர் பிராந்தியத்திலுள்ள பிரின்ஸ்தோர்ப் நகரில் இப்பெண் மதுபான விடுதியொன்றை நடத்தி வந்தார்.
அவ்விடுதியில் பணியாற்றிய 18 வயது யுவதி ஒருவரின் பெயரை தனது கணவர் படுக்கையில் வைத்து உச்சரித்தார் என லூய்ஸா சான்டோஸ் கூறுகிறார். இதனால் அந்த யுவதிக்கும் தனது கணவனுக்கும் அந்தரங்க தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த லூய்ஸா சான்டோஸ், மேற்படி யுவதியை கத்தியால் குத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மதுபான விடுதியில் வாடிக்கையாளர்கள் பலர் முன்னிலையில இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே 21 ஆம் திகதி நடந்தஇச்சம்பவத்தில் முதுகிலும் இடுப்பிலும் காயமடைந்த யுவதி உயிர் தப்பினார்.
யுவதி மீது கத்திக் குத்து நடத்தப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலிஸார் அங்கு வந்தவேளையிலும் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் லூய்சா மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த வோர்விக் கிறவுண் நீதிமன்றம் லூய்சா சான்டோஸுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM