தினமும் வேலைக்குச் செல்லும் மக்கள் வீடு திரும்புவதற்கு பொதுவாக, பஸ்கள், கார்கள், துவிச்சக்கர வண்டிகள், ரயில்கள், மோட்டார் சைக்கள் போன்றவற்றில் பயணம் செய்வர். அல்லது நடந்து செல்வர்.
ஆனால், சுவிட்ஸர்லாந்தின் பாசெல் நகரிலுள்ள மக்கள் பலர் ஆற்றை நீந்திக் கடந்து வீடு திரும்புகின்றனர்.
மருந்து நிறுவனங்கள், கலைக்கூடங்கள் போன்றவற்றுக்கு பிரசித்தமான நகரம் இது. அங்குள்ள மக்களுக்கு நீந்துவதும் மிகவும் பிடித்தமான விடயம்.
வேலை முடிவடைந்து வீடு திரும்பும் வழியில், அந்நகருக்கு ஊடாக செல்லும் ரைன் நதியில் நீந்தி செல்வதற்கு பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இவர்கள் தமது ஆடைகள், செல்போன் மற்றும் பொருட்களை மீன் வடிவிலான பை ஒன்றுக்குள் வைத்துக்கொண்டு அப்பையுடன் நீந்துகின்றனர்.
இப்பை 'விக்கெல்பிஷ்' என அழைக்கப்படுகிறது. நீந்துவதற்கு உதவும் ஒரு உபகரணமாகவும் இது பயன்படுவதாக தெரிவிக்கிறப்படுகிறது.
இவ்வாறு நீந்திச் செல்பவர்கள் ஆற்றிலிருந்து வெளியேறியவுடன் ஆடை மாற்றிக் கொள்வதற்காக ரைன் நதியோரங்களில் சிறு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக பயண எழுத்தாளர் அலெக்ஸா தெரிவித்துள்ளார். சில இடங்களில குளியல் மற்றும் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அவர் கூறுகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM