நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ; 33 பேர் உயிரிழப்பு

12 Oct, 2022 | 12:01 PM
image

கடந்த வாரத்தில் மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிக மோசமான பருவமழை வடமேற்கில் உள்ள கர்னாலி மாகாணத்தைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

பனிச்சரிவு மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மாகாணம் முழுவதும் குறைந்தது 22 பேர் காணாமல் போயுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாகாணத்தின் சில பகுதிகளில், கர்னாலி நதி 12 மீ (39 அடி) வரை உயர்ந்துள்ளது என்று நேபாளத்தின்  அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆற்றின் மீது இருந்த பல தொங்கு பாலங்களும் அடித்து செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசு அதிகாரிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் அப்பகுதிக்கு உதவிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு நேபாளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நேபாளம்  பருவமழை காலத்தின் முடிவை நெருங்குகிறது, இது பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபரில் முடிவடைகிறது.

இந்த ஆண்டு மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 110 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய...

2023-10-02 18:51:38
news-image

எகிப்தில் பொலிஸ் வளாகத்தில் தீ விபத்து...

2023-10-02 13:42:14
news-image

மெக்சிக்கோவில் தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து...

2023-10-02 13:04:07
news-image

மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா்...

2023-10-02 11:41:07
news-image

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க...

2023-10-01 13:04:10
news-image

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக சீன ஆதரவு...

2023-10-01 07:23:16
news-image

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல்: இந்திய -...

2023-10-01 09:23:12
news-image

அமைச்சராக ஒன்ராறியோ மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி...

2023-09-30 20:09:56
news-image

சிம்பாப்வேயில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில்...

2023-09-30 13:23:11
news-image

பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி

2023-09-30 10:40:54
news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08