இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு புதிய தலைவர் ? - கங்குலி விலகுவதற்கு என்ன காரணம் ?

12 Oct, 2022 | 11:04 AM
image

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான ரோஜர் பின்னி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியும், செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, சௌரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் தங்களது பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.

அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக உள்ள சௌரவ் கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதால், குறித்த பதவிகளுக்கான தேர்தல் பணிளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆரம்பித்துள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று மற்றும் நாளை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை 13 ஆம் திகதி நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வேட்பாளர்கள் தங்களது மனுக்களை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதிக்குள் திரும்பப் பெறலாம் என்றும், ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவிக்கு இந்த முறை சௌரவ் கங்குலி போட்டியிடவில்லை என்று உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. 

எனினும் செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிட ஜெய் ஷா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக தற்போது நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளே உள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், தலைவர் பதவியில் உள்ள அவரின் பதவிக்காலம் இந்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. 

இதையடுத்து இடம்பெறவுள்ள ஐ.சி.சி. யின் தலைவருக்கான தேர்தலில், தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி போட்டியிட உள்ளார். 

இதனை முன்னிட்டுத்தான் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக அவர் போட்டியிடவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, இந்திய அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான ரோஜர் பின்னி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவிக்கு இன்று  வேட்பு மனு தாக்கல் செய்யுவுள்ளதாகவும், பின்னர் ஒருமனதாக அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இதேவேளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவராக ராஜீவ் சுக்லாவும், இணை செயலாளராக தேவஜித் சாய்கியாவும், பொருளாளராக ஆஷிஷ் ஷெலரும், ஐபிஎல் தலைவராக அருண் துமாலும் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35