உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : மைத்திரி சார்பிலான சமர்ப்பணம் நிறைவு

Published By: Vishnu

11 Oct, 2022 | 10:44 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட  வழக்கில் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டு  பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை வலுவிழக்க செய்து உத்தரவிடுமாறு  கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு ( ரிட்) மீதான பரிசீலனைகள் இன்று (11) ஆரம்பிக்கப்பட்டன.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான  தம்மிக கனேபொல மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் பரிசீலனைகள் இவ்வாறு ஆரம்பமாகின.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையில், ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய சிரேஷ்ட சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக,  சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், கீர்த்தி திலகரத்ன, அஷான் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகிய நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மனுதாரர் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையில்,  தனது சேவை பெறுநரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எந்த  பரிந்துரைகளும் முன் வைக்கப்படவில்லை என இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா,  அந்த விசாரணைகளில் தனது சேவை பெறுநருக்கு எதிராக எந்த சாட்சிகளும் பதிவாகவில்லை என குறிப்பிட்டார்.

 இதனைவிட குறித்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளிலும் தனது சேவை பெறுநருக்கு எதிராக எந்த சாட்சியங்களும் வெளிப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதிட்டார்.

  இதனைவிட,  இந்த விவகாரத்தை மையப்படுத்தி சட்ட மா அதிபர் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் முன்  தொடுத்த வழக்குகளில் இருந்து, பிரதிவாதி தரப்பு நியாயங்களை கேட்காமலேயே அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இந்த விவகார விசாரணைகள் மிக மந்த கதியில் இடம்பெறுவதாக,  இந்த ரிட் மனுவின் பிரதிவாதிகள் ( தனிப்பட்ட வழக்கின் முறைப்பாட்டாளர்கள் ) குற்றம் சுமத்தும் நிலையில், அவ்வாறான நிலை இருப்பின் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு வந்து உரிய கட்டளைகளைப் பெற்று விசாரணைகளை விரைவுபடுத்த அவர்களுக்கு அவகாசம் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா குறிப்பிட்டார்.

 இவ்வாறான பின்னணியில்,  போதுமான சாட்சிகள் இன்றி, தனது சேவை பெறுநரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் பிறப்பித்த அழைப்பானை அறிவித்தல் சட்டத்துக்கு முரணானது என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதிட்டார்.

எனவே, கோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  தனிப்பட்ட வழக்கின் சந்தேகநபராக தமது பெயரை குறிப்பிட்டு, எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்து, கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட  நீதிவானின் கட்டளையை வலுவிழக்க  செய்ய வேண்டும் என அவர் கோரினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தனது சேவை பெறுநருக்கு எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையில், அது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனு ஒன்றின் பிரதிவாதியாக  நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டமை நீதியான விடயம் அல்லவெனவும், இயற்கை நீதிக்கு புறம்பான செயல் எனவும்  ஜனாதிபதி சட்டத்தரணி பாயிச் முஸ்தபா இதன்போது சுட்டிக்காட்டியுருந்தார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக கோட்டை நீதவானும் நீதிமன்ற பதிவாளரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இன்று (11) குறித்த ரிட் மனு ஆராயப்பட்ட போது,

சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய ஆஜரானார்.

 பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன பிரசன்னமானார்.

 நேற்று மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில், இன்று பிரதிவாதிகள் சார்பில்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி  ரியன்சி அர்சகுலரத்ன ஆகியோர் வாதங்களை முன் வைக்கவுள்ளனர்.

முன்னதாக உயிர்த்த  ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்  அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயமடைந்து, கால் ஒன்றை இழந்த ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். 

 அவரது அலட்சியத்தால் குறித்த தாக்குதலில் மரணங்கள் சம்பவித்ததாக மனுவில்  அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அம்மனு தொடர்பிலேயே கோட்டை நீதிவான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24