முதலாவது பிணை முறிவழக்கு - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட பத்துபேர் விடுவிப்பு

Published By: Rajeeban

12 Oct, 2022 | 07:30 AM
image

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில்  ( 2015) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொதுச்சொத்து துஷ்பிரயோக  சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை முன்னெடுத்து செல்ல முடியாது என முதலாவது நிரந்தர மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை  ( 11) அறிவித்தது.

வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனத்தை ஏற்றே நீதிமன்றம் இதனை அறிவித்தது. 

அதன்படி இவ்வழக்கின் விசாரணைகளுக்கு முன்னரான முன் விளக்க மாநாட்டை எதிர்வரும்  டிசம்பர்  16 ஆம் திகதி நடாத்த தீர்மானித்த நீதிமன்றம் அதுவரை வழக்கை ஒத்தி வைத்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறிகள் ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர்   தாக்கல் செய்துள்ள வழக்கு செவ்வாய்க்கிழமை (11) விசாரணைக்கு வந்தது.

முதலாவது நிரந்தர மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான சஞ்ஜீவ மொறாயஸ், தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் முன்னிலையில் விசேட மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது முதல் பிரதிவாதி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 10 ஆம் பிரதிவாதி பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஜான் புஞ்சிஹேவா தவிற ஏனையோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பத்தாவது பிரதிவாதியான அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி முன்னெடுத்து செல்ல மேல் மாகாண முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம்   அனுமதியளித்தது. 

குற்றவியல் சட்டத்தின் 450 (8) ஆம் அத்தியாயத்துக்கு அமைய சட்ட மா அதிபர் சார்பில்,  முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, அர்ஜுன மகேந்திரன், அஜான் கார்டியா புஞ்சிஹேவா  ஆகிய பிரதிவாதிகள்   மன்றினில் ஆஜராவதை புறக்கணிக்கும் நிலையில், அவர்கள் இல்லாமலேயே அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுக்க  நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அவ்வாறான நிலையில், இந்த வழக்கானது இதற்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  பிரதிவாதிகளான பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம், அதன் பணிப்பாளர்களான ஜெப்ரி அலோசியஸ், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதான  நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன மற்றும் நவீன் மாரப்பன ஆகியோர் ஆட்சேபனங்களை முன்வைத்திருந்தனர். ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணிகளான அணில் சில்வா உள்ளிட்டோரும்  அவ்வாறான ஆட்சேபனங்களை முன் வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பேப்பசுவல் ட்ரசரீஸ்  நிறுவனம் ஒரு நபராக இல்லாத நிலையில், அதற்கு எதிராக பொதுச்சொத்துகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சட்டப்பூர்வ இயலுமை இல்லை என   ஜனாதிபதி சட்டத்தரணிகளான  காமினி மாரப்பன,  நவீன் மாரப்பன ஆகியோர் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனையை முன் வைத்து வாதிட்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த  அடிப்படை ஆட்சேபனையை மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்துக்கு அமைய  நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அதன்படி  ஏனைய பிரதிவாதிகளில் பெரும்பான்மையானவர்கள் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இருந்ததால் அவர்களுக்கு எதிராக அதே குற்றச்சாட்டுகளை  முன் கொண்டு செல்ல  முடியாது என்ற பிரதிவாதிகளின் அடிப்படை ஆட்சேபனைகளை  நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இதற்கமைய,  சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பகிர்வுப் பத்திரிகைக்கு அமைய, வழக்கு விசாரணைகளை ஆரம்பிப்பதன் பொருட்டு, முன் விளக்க மாநாட்டை எதிர்வரும்  டிசம்பர் 16 ஆம் திகதி நடத்த நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலத்தில் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 23 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர்களில் ஒருவரான பத்தினிகே சமரசிறி, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், அந் நிறுவனத்தின் பிரதான நிறிஅவேற்று அதிகாரி கசுன் ஓஷத பலிசேன, அந் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி ஜோஸப் அலோசியஸ்,  அந் நிறுவனத்தின் சேவையாளர்களான  புஷ்பமித்ர குனவர்தன, சித்ரா ரஞ்சன் ஹுலிகல்ல, முத்துராஜா சுரேந்ரன்,  மற்றும்  அஜான்ன் கார்திய புஞ்சிஹேவா ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாவர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13