பீட்ரூட் சப்பாத்தி

Published By: Devika

11 Oct, 2022 | 04:36 PM
image

தேவையான பொருட்கள்:  

கோதுமை மா - 2 கப்

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – ½ டீஸ்பூன்

எண்ணெய், நெய் கலவை - தேவையான அளவு

அரைக்க: 

பீட்ரூட் - 1

சோம்பு - 1 டீஸ்பூன்

மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்

வெ.பூண்டு (விருப்பப்பட்டால்) - 2 பல்

உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய சாறுடன் கோதுமை மா, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் மாவை சப்பாத்தியாக திரட்டி வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்