பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதிபர் கைது

Published By: Vishnu

11 Oct, 2022 | 04:45 PM
image

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை 10 ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது; 

கா.பொ.த. உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை ஒன்றில் விடுதியில் இருந்து கொண்டு வேறு ஒரு பாடசாலையில் கல்விகற்றுவருகின்றார்.

இந்த நிலையில் கடந்த யூலை மாதம் 21 ஆம் திகதி பாடசாலை அதிபர் மாணவியை தனது காரியாலயத்திற்கு  வரவழைத்து அந்த மாணவி மீது பாலியால் சேஷ்டை புரிய எத்தனித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ம் திகதி பாடசாலைக்குள் சென்று தாம் சிஜடி என தெரிவித்து அதிபரை தாக்கியதுடன் அவரை தாக்கிய போது வீடியோ படம் எடுத்துள்ளனர்.

இந்த அதிபர் மீது தாக்குதல் நடாத்திய வீடியோ தற்போது படம் வெளியாகியதையடுத்து இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி சம்பவதினமான 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்  அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இதேவேளை அதிபர் தன்மீது சிஜடி எனதெரிவித்து 4 பேர்  தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர்களை தனக்கு அடையாளம் தெரியாது எனவும் வெளியாகிய வீடியோவை ஆதாரமாக வழங்கி தாக்குதல் நடாத்தியவர்களுக்கு எதிராக அதிபர் நேற்று மாலை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொஹான் ரத்வத்த பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்...

2024-11-03 20:45:01
news-image

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது -...

2024-11-03 19:46:53
news-image

மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டதா?...

2024-11-03 19:33:58
news-image

மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி...

2024-11-03 20:53:28
news-image

1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என...

2024-11-03 20:52:45
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,408...

2024-11-03 17:32:08
news-image

மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய...

2024-11-03 17:11:21
news-image

வன்முறையற்ற தேர்தல் கலாசாரம் உருவாகிறது -...

2024-11-03 16:40:17
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-11-03 16:15:12
news-image

கூட்டமைப்பில் இணையுமாறு ஏனைய தமிழ் தேசிய...

2024-11-03 16:33:21
news-image

வீடொன்றில் கட்டிலுக்கு அடியிலிருந்து எட்டு அடி...

2024-11-03 16:01:26
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத்...

2024-11-03 15:11:33