மதம் மற்றும் மொழி அடிப்படைவாதத்தால் இன்று பல மத்திய கிழக்கு நாடுகள் அழிவை சந்தித்துள்ளன. அவ்வாறானதொரு நிலைக்கு இலங்கை சென்றுவிடாது தடுக்க வேண்டும். அதற்கு பொலிஸாரின் பாதுகாப்பு அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அடிப்படைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்தார். 

களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை பெற்று வெளியேறும் பொலிஸாரின் மத்தியில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

மத்திய கிழக்கில் பல நாடுகள் இன்று மதம் மற்றும் மொழி அடிப்படைவாதத்தால் அழிந்துகொண்டிருக்கின்றன.

அவ்வாறானதொரு அபாக்கிய நிலைக்கு இலங்கை போய்விடக்கூடாது. 

எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் எதிர்கால சந்ததியினர்  நிம்மதியாக வாழ்வதற்கு நாட்டில் சமாதானத்தையும் இலங்கையின் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.