Crystalstone படிகக்கல் காட்சியறை CeyQuartz நிறுவனத்தால் திறந்து வைப்பு

Published By: Vishnu

11 Oct, 2022 | 04:46 PM
image

இலங்கையில் Crystalstone படிகக்கல் உற்பத்தி மற்றும் இறக்குமதியில் முன்னணியாளர்களாக விளங்கும் CeyQuartz நிறுவனம் அதன் பிரதான படிகக்கல் காட்சியறையை நாவலயில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. 

இராஜகிரிய, கொஸ்வத்த சந்தியில், நாவல வீதியில் 496ம் இலக்க நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புதிய படிகக்கல் காட்சியறையில் இல்லங்களை படிகக்கல் அழகுடன் நிர்மாணிக்க விரும்புவோருக்கும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட இல்லங்களை படிகக்கல் பளிங்கு அழகுடன் புனரமைக்க விரும்புவோருக்கும் வேண்டிய அனைத்து வகையான படிகக்கற்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இலங்கையில் படிகக்கற்களுக்கென திறந்து வைக்கப்பட்ட முதலாவது பாரிய படிகக்கல் காட்சியறையாகவும் விளங்குகிறது.

Crystalstone படிகக்கற்கள் உயர்ந்த சர்வதேச தரத்தை உடையவை என்பதுடன் முற்றிலும் Crystalstone என்ற தேசிய வர்த்தகநாமத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டவையாகும். இவ்வாறு  முக்கியமாக கவுன்டர்ரொப் படிகக்கல் மற்றும் மேற்பரப்பு படிகக்கல் வகைகள் (Crystalstone Countertops & Surfaces) உட்பட ஏனைய படிகக்கல் பதிப்புக்குத் தேவையான படிகக்கல் வகைகளையும் CeyQuartz நிறுவனத்தின் நவீன படிகக்கல் காட்சியறையில் பெற்றுக்கொள்ள முடியும்.

பளிங்கு அழகுடன் இல்லங்களையும் ஏனைய நிலையங்களையும் நிர்மாணிக்க விரும்பும் பாவனையாளர்கள்  அதற்கான அனைத்து வகையான படிகக்கற்களையும் ஒரே நிலையத்தில் கொள்வனவு செய்யக்கூடியதாக இந்த பாரிய புதிய காட்சியறை அமைக்கப்பட்டுள்ளது.  

Crystalstone உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தலைமை உத்தியோகத்தர் திரு.ஏ.எப்.எம்.பாடரூக் இந்த புதிய Crystalstone காட்சியறை திறப்பு நிகழ்வில் பங்குபற்றி  உரையாற்றும் போது Crystalstone  உற்பத்திகள் உயர்ந்த சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் இறக்குமதி செய்யப்படும் படிகக்கற்களின் விலையை விட பெருமளவில் விலை குறைந்தவை எனவும் எனவே பாவனையாளர்கள் Crystalstone படிகக்கற்கள் கொள்வனவு செய்வதன் மூலம் அவர்களின் இல்லங்களுக்கு உயர்ந்த சர்வதேச தரத்திலான Crystalstone படிகக்கற்களை கட்டுப்படியான குறைந்த விலைகளில் பதிப்பித்துக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் Crystalstone படிகக்கற்கள் இறக்குமதி செய்யப்படும் ஏனைய படிகக்கற்களை விட மிகவும் கவர்ச்சிகரமானவை என்பதுடன் பள்ளம் மேடான வேறுபட்ட  மேற்பரப்புக்களுக்கு பொருந்தக்கூடியவகையில் பல்வேறு வடிவமைப்புக்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் வேறுபட்ட வெப்பநிலைகளால் பாதிக்கப்படாதவையாகும். இதனால் Crystalstone படிகக்கற்களின் பளிங்குத்தன்மை அழகு மற்றும் கவர்ச்சி நீண்டகாலம் நிலைத்து நிற்கக்கூடியதாகும். 

CeyQuartz நிறுவனம் Crystalstone படிகக்கற்களை விற்பனைச் சந்தைகளின் தேவைகள் மற்றும் வியாபாரத்திட்டங்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்து விநியோகிப்பதுடன் உள்@ர் சந்தைகளுக்காக (B2B Market) 75% வரையில் வர்த்தக தள்ளுபடிகளையும் வழங்குகிறது. 

தேசிய பாவனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்து வகையான மேற்பரப்பு படிகக்கற்களையும் (Quartz Surface) இலங்கையிலேயே உயர்தரமாக உற்பத்தி செய்து வழங்குவதே CeyQuartz நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளதுடன் அதற்காக நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களையும் உற்பத்தி முறைகளையும் பயன்படுத்துகிறது.

அத்துடன் Crystalstone உற்பத்தி நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் விரிவாக்கம் செய்வதற்காக மேலதிக முதலீடுகளையும் CeyQuartz மேற்கொண்டுள்ளது. இதற்கேற்ப கொழும்பு மாவட்டத்தில் புதிய Crystalstone காட்சியறை திறந்து வைக்கப்பட்டது போலவே குருணாகல், காலி, யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் புதிய Crystalstone காட்சியறைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். CeyQuartz நிறுவனத்தின் Crystalstone படிகக்கல் தலைமை உற்பத்தி நிலையம் உயர்தரமான ISO 9001:2015 மற்றும் ISO 14001: 2015 ஆகிய உயர்தரப்பாடுகளைப் பெற்றதாகும்.  

CeyQuartz நிறுவனம் மற்றும் Crystalstone உற்பத்தி சம்பந்தமான மேலதிக தகவல்களை www.crystalstone.lk வெப்தளம். info@crystalstone.lk மின்னஞ்சல் அல்லது தொ.பே.இலக்கம் 0773150111 மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56